இந்தியாவில் வசிக்க போலி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதாக வங்கதேசத்தை சேர்ந்த சினிமா நடிகை கைது செய்யப்பட்டார்.

February 17, 2025
இந்தியாவில் வசிக்க போலி இந்திய பாஸ்போர்ட்டை பயன்படுத்தியதாக வங்கதேசத்தை சேர்ந்த சினிமா நடிகை கைது செய்யப்பட்டார்.
Published on: September 27, 2024 at 5:45 pm
Bangladeshi actress arrested in Mumbai | வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் நக்மா நூர் மக்சூத் அலி. பட நடிகையான இவர் சனம் கான் என அழைக்கப்படுகிறார். இவருக்கு வங்கதேசத்தில் தொடர் அச்சுறுத்தல்கள் இருந்துள்ளன.
இந்த நிலையில் இவர்கள் இந்தியாவில் போலியான ஆவணங்களை தயார் செய்து வாழ்ந்துவந்துள்ளனர். இது தொடர்பாக போலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின் பேரில் மும்பையில் போலீசார் சோதனை நடத்தினார்கள். இந்தச் சோதனையில் நடிகை சனா கான் போலியான ஆவணங்கள் தயார் செய்து இந்தியாவில் வசிப்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து அவர் மீது, உல்காஸ்நகர் ஹில் காவல் நிலைய போலீசார், வெளிநாட்டினர் சட்டம், 1946 பிரிவு 14(A) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
முன்னதாக, இந்த ஆண்டின் தொடக்கத்தில், மகாராஷ்டிர மாநிலம் தானேயில் 23 வயது பெண் ஒருவர், போலி பாஸ்போர்ட் மற்றும் போலி ஆவணங்கள் மூலம் பெறப்பட்ட விசாவைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்குச் சென்றதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
வங்கதேச நடிகை வழக்கில் போலீசார் மேலும் 4 பேரை தேடிவருகின்றனர். நடிகையின் பெற்றோர் கத்தாரில் வசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இதையும் படிங்க : வங்கதேச ஏரியில் சடலமாக மிதந்த பெண் பத்திரிகையாளர்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப் ட்விட்டர் இன்ஸ்டாகிராம்
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com