Israeli female tourist files complaint: கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணி உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Israeli female tourist files complaint: கர்நாடகாவில் இஸ்ரேல் சுற்றுலா பயணி உள்பட 2 பேர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Published on: March 8, 2025 at 12:30 pm
பெங்களூரு, மார்ச் 8, 2025: கர்நாடக மாநிலத்தில் 27 வயதான இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தச் சம்பவம் வியாழக்கிழமை இரவு ( மார்ச் 6, 2025) 11:30 மணிக்கு நடைபெற்றதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இஸ்ரேலிய பெண் அன்றைய தினம் இரவு உணவை முடித்துவிட்டு துங்கபத்திரை ஆற்றங்கரையோரம், விடுதி உரிமையாளர் (29 வயதான மற்றொரு பெண்) உடன் அங்கிருந்தபடி நட்சத்திரங்களை ரசித்து கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்கள், அருகில் பெட்ரோல் பங்க் எங்கு உள்ளது? என கேட்டுள்ளனர்.
தொடர்ந்து இரு பெண்கள் தனியாக இருப்பதைப் பார்த்த அந்த நபர்கள், ₹100 இருக்குமா என இஸ்ரேலிய பெண் பயணியிடம் கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே, மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கிய அந்த மூன்று நபர்கள் இரு பெண்களையும் தாக்கி அங்கிருந்த கால்வாய் பகுதிக்கு தள்ளி உள்ளனர்.
இந்த நிலையில் இஸ்ரேலிய பெண் சுற்றுலா பயணி உட்பட அந்த இரண்டு பெண்களையும் மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று நபர்களும் கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இரு பெண்கள் பாதிக்கப்பட்ட பகுதி கொப்பால் என்ற பகுதி காவல் எல்லைக்குள் வருகிறது.
இதுகுறித்து பேசிய கொப்பால் போலீஸ் அதிகாரி, “குற்றவாளிகள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டேனியல் ஆவார்.
மற்ற இருவரும் மகாராஷ்டிரா மற்றும் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். இவர்கள் மூவரும் விரைவில் கைது செய்யப்படுவார்கள்” என்றார்.
இந்த விவாகரத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொப்பால் போலீஸ் சூப்பிரண்டு (எஸ்.பி) ராம் எல் அர்சித்தி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கில் குற்றவாளிகளை பிடிக்க இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்துள்ள புகாரின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை மற்றும் கொள்ளை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதையும் படிங்க: காவல் சீருடையில் எஸ்.ஐ தற்கொலை.. தீயாய் பரவும்.. அதிர்ச்சி சம்பவம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com