Bodybuilder Chitra wedding viral look: இணையத்தை கலக்கி வருகிறார் பாடி பில்டர் சித்ரா புருஷோத்தமன். யார் இவர்? எங்கு வசிக்கிறார் தெரியுமா?
Bodybuilder Chitra wedding viral look: இணையத்தை கலக்கி வருகிறார் பாடி பில்டர் சித்ரா புருஷோத்தமன். யார் இவர்? எங்கு வசிக்கிறார் தெரியுமா?
Published on: March 8, 2025 at 11:41 am
பெங்களூரு (கர்நாடகா) மார்ச் 8, 2025: பாடிபில்டர் சித்ரா புருஷோத்தமின் திருமண தோற்றம் ஆன்லைனில் அண்மையில் வைரலானது. இவர் காஞ்சிபுரம் பட்டு புடவையில், பாரம்பரிய தங்க நகைகளுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து இருந்தார்.
மேலும், சித்ரா புருஷோத்தம் தனது ரவிக்கையைத் தவிர்த்து, கமர் பந்த், மாங் டிக்கா, காதணிகள் உள்ளிட்ட ஆபரணங்கள் அணிந்து இருந்தார்.
யார் அந்த மணமகன்?
சித்ரா புருஷோத்தமனின் இந்த வீடியோ 1 லட்சத்து 38 ஆயிரம் பார்வையாளர்களை சென்றடைந்தது. இந்த வீடியோவுக்கு பலரும் தங்களின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
மேலும் சிலர் மணமகன் யார்? அவர் என்ன செய்கிறார் என்றெல்லாம் பாடி பில்டர் சித்ராவிடம் கேள்விகளை எழுப்பி இருந்தார்கள்.
இதற்கு சித்ரா எந்தப் பதிலும் அளிக்கவில்லை. எனினும் மணமகன் குறித்த தகவல்கள் உள்ளுர் ஊடகங்களில் வெளியாகியுள்ளன. மணமகள் சித்ரா கிரண் ராஜ் என்பவரை நீண்ட நாள்களாக காதலித்து வந்துள்ளார். அவரை தான் மணக்கவுள்ளார் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க : 25 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.. நோட் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com