அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், மனைவி, 2 மகள்கள் சுட்டுக்கொலை!

அமேதியில் அரசுப் பள்ளி ஆசிரியர், அவரின் மனைவி மற்றும் 2 மகள்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Published on: October 3, 2024 at 11:04 pm

Govt School Teacher Shot Dead In Amethi | உத்தரப் பிரதேச மாநிலம் அமேதியில் உள்ள ஒரு வயது கைக்குழந்தை மற்றும் ஆறு வயது பெண் குழந்தை உட்பட நான்கு பேர் கொண்ட குடும்பம் இன்று (செப்.3, 2024) சுட்டுக்கொல்லப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுட்டுக் கொல்லப்பட்டவர் 35 வயதான சுனில் மற்றும் அவரது மனைவி பூனம் (32) ஆவார். இவர்கள் பவானியில் வாடகை வீட்டில் வசித்துவந்தனர். சுனில் அரசுப் பள்ளி ஆசிரியர் ஆவார். இந்த நிலையில் அவர் உள்பட முழு குடும்பமும் மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து, அமேதி காவல் கண்காணிப்பாளர் (SP) அனூப் குமார் சிங், “சுனில் ரேபரேலியை பூர்வீகமாகக் கொண்டவர். பன்ஹவுனாவில் உள்ள அரசுப் பள்ளியில் பணிபுரிந்துவந்தார். முதற்கட்ட விசாரணையில், சந்தன் வர்மா என்பவர் மீது 1989ஆம் ஆண்டு பட்டியல் சாதி மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் புகார் அளித்துள்ளனர். இந்த ஈவ் டீசிங் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

யோகி ஆதித்யநாத்

உத்தரப் பிரதேச முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத், “இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார். மேலும், “அமேதி மாவட்டத்தில் இன்று நடந்த சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது; மன்னிக்க முடியாதது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள்.

துயரத்தின் இந்த நேரத்தில், உத்தரப் பிரதேச அரசு பாதிக்கப்பட்ட குடும்பத்துடன் நிற்கிறது. இந்த சம்பவத்தின் குற்றவாளிகள் எக்காரணம் கொண்டும் தப்ப முடியாது, அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியுள்ளார்.

அகிலேஷ் யாதவ்

எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், சம்பந்தப்பட்ட வீடியோவை பகிர்ந்து யாராவது இருக்கிறீர்களா? எனக் கேள்வியெழுப்பி உள்ளார்.

இதையும் படிங்க

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா பானர்ஜி Mamata Banerjee

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கம்.. உச்ச நீதிமன்றத்தை நாடிய மம்தா

Mamata Banerjee: திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பெயர், சின்னம் முடக்கப்பட்டதை எதிர்த்து மம்தா பானர்ஜி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யவுள்ளார்….

வாக்குத் திருட்டு, அரசு திருட்டு, இப்போது கட்சியின் சின்னம் திருட்டு.. ராகுல் காந்தி! Rahul Gandhi

வாக்குத் திருட்டு, அரசு திருட்டு, இப்போது கட்சியின் சின்னம் திருட்டு.. ராகுல் காந்தி!

Rahul Gandhi: வாக்கு திருட்டு, அரசு திருட்டை தொடர்ந்து தற்போது கட்சியின் சின்னம் திருடப்பட்டுள்ளது என ராகுல்காந்தி விமர்சித்துள்ளார்….

டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட நான்கு பேர் கைது! Delhi Rape-Murder

டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்.. 3 சிறுவர்கள் உட்பட நான்கு

Delhi Rape-Murder: டெல்லியில் 17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது….

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு! Telangana

24 காரட் தங்க முலாம் பூசப்பட்ட விநாயகர்.. ஹைதராபாத் மார்க்கெட்டில் பரபரப்பு!

Telangana: தெலுங்கானாவில் 24 கேரட் தங்க விநாயகர் மக்கள் மத்தியில் பெரும் கவனத்தை ஈர்த்தது….

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக! BJP Leads Rajasthan

ராஜஸ்தான் மாநில உள்ளாட்சித் தேர்தல்.. ஜெய்ப்பூர்-ஐ கைப்பற்றிய பாஜக!

BJP Leads Rajasthan: ராஜஸ்தான் மாநில உள்ளாட்சி தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி முன்னிலை வகிக்கிறது; இக்கட்சி ஜெய்ப்பூரை கைப்பற்றி உள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com