Jammu and Kashmir | ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலில் தேசிய மாநாட்டு கட்சி 42 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. 29 தொகுதிகளுடன் பாரதிய ஜனதா 2ம் இடம் வகிக்கிறது.
நான்காம் இடத்தில் உள்ள காங்கிரஸ் வசம் 6 தொகுதிகள் மட்டுமே உள்ளன. பி.டி.பி.யிடம் 4 தொகுதிகளும் உள்ளன. இந்த நிலையில், ஜம்மு காஷ்மீர் முதல் அமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார் என ஃபரூக் அப்துல்லா கூறியுள்ளார்.
இது குறித்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஜம்மு காஷ்மீரின் முதலமைச்சராக உமர் அப்துல்லா பதவியேற்பார்” எனத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய ஃபரூக் அப்துல்லா, “ஆகஸ்ட் 5, 2019 அன்று எடுக்கப்பட்ட முடிவுகள் (பிரிவு 370 ரத்து) மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாதவை என்பதை மக்கள் தங்கள் தீர்ப்பை அளித்து நிரூபித்துள்ளனர்” என்றார்.
மக்கள் வாக்கெடுப்பில் பங்கேற்று சுதந்திரமாகச் செய்ததற்காக அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன். முடிவுகளுக்காக நான் கடவுளுக்கு நன்றியுள்ளவனாக இருக்கிறேன். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் மக்களின் “துன்பங்களுக்கு” முடிவு கட்ட நிறைய வேலைகளைச் செய்யும்” என்றார்.
இதையும் படிங்க ஜம்மு காஷ்மீரில் பா.ஜ.க, தேசிய மாநாட்டு கட்சி இடையே போட்டி: உமர் அப்துல்லா
Viksit Bharat G-RAM-G Act: மத்திய அரசின் விக்சித் பாரத் ஜி ராம் ஜி திட்டத்தின் மூலமாக, 125 நாள்கள் வேலை கிராமப்புற மக்களுக்கு உறுதியாக வழங்கப்படும்…
Amit Shah : “இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவாகும்” என உள்துறை அமித்ஷா கூறியுள்ளார்….
Droupadi Murmu Greetings on Pongal: பஞ்சாபியர்களின் அறுவடை திருநாளான லோஹ்ரி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு….
Nipah Virus: மேற்கு வங்கத்தில் இருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது….
Narendra Modi: பொங்கல் தினத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அலுவலகம் மாற்றப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்