டெல்லி மெட்ரோ லிப்டில் சிறுநீர் கழித்த முதியவர்.. பாதிக்கப்பட்ட பெண் புகார்!

Delhi Metro Lift Incident Viral : டெல்லி மெட்ரோ லிப்டில் முதியவர் ஒருவர் சிறுநீர் கழித்த விவகாரம் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: May 18, 2026 at 11:13 am

புதுடெல்லி, மே 18, 2026: டெல்லி மெட்ரோவில் நடந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. டெல்லி கல்காஜி மெட்ரோ நிலையத்தில், ஒரு முதியவர் லிப்டில் சிறுநீர் கழித்ததாக ஒரு பெண் எதிர்கொண்ட வீடியோ வைரலானது.

போலீசார் பின்னர் இது மருத்துவ அவசர நிலை காரணமாக நடந்ததாகவும், அந்த நபருக்கு அபராதம் விதிக்கப்பட்டதாகவும் விளக்கம் அளித்தனர். இந்தச் சம்பவம், மே 15, 2026 இரவு 9.40 மணியளவில் கல்காஜி மெட்ரோ நிலையத்தில் இந்த சம்பவம் நடந்தது. அதாவது, டீப்ஷிகா மேத்தா என்ற பெண் தொழில்முனைவோர், லிப்டில் இருந்தபோது முதியவர் சிறுநீர் கழிப்பதை கண்டதாகவும், அதை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பகிர்ந்ததாகவும் கூறினார்.

இதுதொடர்பாக, டெல்லி போலீஸ் விசாரணையில், அந்த முதியவர் ஜாமியா மெட்ரோ நிலையத்திலிருந்து பாரிதாபாத் நோக்கி பயணம் செய்தபோது, கல்காஜி நிலையத்தில் மருத்துவ அவசர நிலை ஏற்பட்டதாக தெரிவித்தது. இதற்கிடையில், டெல்லி மெட்ரோ சட்டப் பிரிவு 59ன் கீழ், பொது இடத்தில் தொந்தரவு ஏற்படுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்த வீடியோ 2 மில்லியன் பார்வைகளை கடந்தது. பலர் இந்த செயலை “அருவருப்பானது, பொது இடங்களில் சுகாதாரத்தை பாதிக்கும் செயல்” எனக் கண்டித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கங்கையில் அசைவ உணவுகளை எறியக் கூடாது.. அலகாபாத் உயர் நீதிமன்றம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com