அவசியமற்ற செலவுகளை தவிர்ப்போம்.. ஒன்றுபடுவோம், வென்றுகாட்டுவோம்.. ஹேமா மாலினி!

Hema Malini Urges Unity : நடிகையும், எம்.பி.யுமான ஹேமா மாலினியின், இந்த கருத்துக்கள், இந்தியா மற்றும் உலகளவில் நிலவும் பொருளாதார அச்சம் மத்தியில் வந்துள்ளன.

Published on: May 18, 2026 at 11:24 am

Updated on: May 18, 2026 at 11:32 am

புதுடெல்லி, மே 18, 2026: பிரதமர் நரேந்திர மோடி உலகளாவிய பொருளாதார சவால்கள் குறித்து எச்சரிக்கை விடுத்த நிலையில், நடிகை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினி, இந்தியர்கள் அனைவரும் ஒன்றுபட்டு பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொள்ள வேண்டும் எனக் கூறியுள்ளார். அவர், கொரோனா காலத்தில் மக்கள் காட்டிய ஒற்றுமையை மீண்டும் வெளிப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது என வலியுறுத்தினார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி நெதர்லாந்து நாட்டின், தி ஹேக் நகரில் நடந்த நிகழ்ச்சியில், மோடி உலகம் தற்போது பாண்டமிக், போர்கள், எரிசக்தி நெருக்கடி போன்ற பல சவால்களை சந்திக்கிறது எனக் கூறினார்.

அப்போது, “இந்த நிலைமைகள் விரைவில் மாறாவிட்டால், கடந்த பல தசாப்தங்களின் சாதனைகள் அழிந்து, உலக மக்கள் மீண்டும் வறுமையில் சிக்கக்கூடும்” என அவர் எச்சரித்தார். மேலும் பிரதமர் நரேந்திர மோடி, எரிபொருள் சேமிப்பு, வெளிநாட்டு பயணக் கட்டுப்பாடு, தங்கம் வாங்குவதை குறைத்தல் போன்ற சுய கட்டுப்பாடுகளை தேசபக்தி எனக் குறிப்பிட்டார்.

ஹேம மாலினி

இந்த நிலையில் நடிகையும், எம்.பி.யுமான ஹேமா மாலினி தனது ட்விட்டர் எக்ஸ் தள கணக்கில், “கொரோனா காலத்தில் நாம் ஒன்றுபட்டு போராடினோம்; அதே ஒற்றுமை இப்போது தேவை” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், “பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்டு, உலகிற்கு இந்தியாவின் வலிமையை மீண்டும் காட்டுவோம்” என அவர் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து, அவசியமற்ற செலவுகளை தவிர்த்து, சிக்கனமாக வாழ்வது தேசத்திற்கு உதவும் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க : தாஜ்மஹாலை நேரில் பார்ப்பது என் கனவு.. கொரிய நடிகை யேரி!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com