BRICS Anti-Drug Agencies Meet : அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies Meeting) 2026 ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
BRICS Anti-Drug Agencies Meet : அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies Meeting) 2026 ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

Published on: July 6, 2026 at 11:19 am
புதுடெல்லி, ஜூலை 6, 2026: அஸ்ஸாம் மாநிலம் கௌகாத்தியில் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மாநாடு (BRICS Heads of Anti-Drug Agencies Meeting) 2026 ஜூலை 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 2026 ஆம் ஆண்டிற்கான பிரிக்ஸ் அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுள்ள நிலையில், மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு வாரியம் (என்.சி.பி) இந்த இரண்டு நாள் கூட்டத்தை நடத்துகிறது.
இதில், பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவூதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் இந்தோனேசியா) போதைப்பொருள் தடுப்பு முகமைகளின் தலைவர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்குப்பெறுகிறார்கள்.
இந்தச் சந்திப்பு, இந்தியாவின் பிரிக்ஸ் தலைமையின் கீழ் “மீள்திறன், புத்தாக்கம், ஒத்துழைப்பு, நிலைத்தன்மை ஆகியவற்றுக்கான அம்சங்களைக் கட்டமைத்தல்” என்ற கருப்பொருளின் அடிப்படையில் நடத்தப்படுகிறது.
இந்த மாநாட்டில் சர்வதேச போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பது குறித்து 6 முக்கிய அமர்வுகளில் அதிகாரிகள் ஆலோசிக்கின்றனர்:
செயற்கை மருந்துகள் தடுப்பு: உலகளவில் அதிகரித்து வரும் சிந்தெடிக் மருந்துகள் மற்றும் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப் பொருட்கள் கடத்தப்படுவதைக் கட்டுப்படுத்துதல். டிஜிட்டல் மற்றும் டார்க்நெட் அச்சுறுத்தல்கள்: கிரிப்டோகரன்சி மற்றும் டார்க்நெட் வலைத்தளங்கள் மூலம் நடக்கும் நவீன போதைப்பொருள் வர்த்தகத்தைக் கண்டறிந்து முடக்குதல்.
உளவுத்துறை தகவல் பகிர்வு: உறுப்பு நாடுகளுக்கு இடையே போதைப்பொருள் கடத்தல் நெட்வொர்க்குகள் குறித்த நிகழ்நேரத் தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்கான செயல்பாட்டு ஒருங்கிணைப்பை வலுப்படுத்துதல்.
கூட்டுப் பிரகடனம்: மாநாட்டின் நிறைவாக, சர்வதேச அளவில் எல்லை தாண்டிய போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிராக கூட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான “கூட்டுப் பிரகடனம்” ஏற்றுக்கொள்ளப்பட உள்ளது.
இந்த மாநாட்டின் மூலம் பிரிக்ஸ் நாடுகளின் போதைப்பொருள் தடுப்பு ஒத்துழைப்பை வெறும் பேச்சுவார்த்தை என்ற நிலையிலிருந்து, கள அளவிலான கூட்டு நடவடிக்கையாக மாற்றுவதற்கு இந்தியா முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது.
இதையும் படிங்க : ஆபரேஷன் ராம் மந்திர்.. அரசியல் கட்சிகளை பிளவுப்படுத்த திருடப்பட்ட நிதி.. உத்தவ் தாக்கரே
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com