Uttar Pradesh | உத்தரபிரதேச பாஜக தலைவர் ஒருவரின் மகன் பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்துள்ளார்.
Uttar Pradesh | உத்தரபிரதேச பாஜக தலைவர் ஒருவரின் மகன் பாகிஸ்தான் பெண்ணை ஆன்லைனில் மணந்துள்ளார்.
Published on: October 20, 2024 at 5:34 pm
Uttar Pradesh | உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி (BJP) தலைவரின் மகன் ஒரு பாகிஸ்தானிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் ஆன்லைனில் நடைபெற்றது.
“ஆன்லைன் நிக்கா” மூலம் உத்தரபிரதேச மாநிலம் ஜான்பூர் மாவட்டத்தில் இந்த விழா நடந்தது. இந்த விழாவின் வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன. உத்தர பிரேதசத்தின் ஜான்பூரில் உள்ள மணமகனும், பாகிஸ்தானின் லாகூரில் உள்ள மணமகளும் ஆன்லைன் வீடியோ அழைப்பில் ‘காபுல் ஹை, காபூல் ஹை’ என்று கூறி திருமணத்தை ஏற்றுக்கொண்டனர்.
जिला : जौनपुर, उत्तर प्रदेश में भाजपा नेता तहसीन शाहिद के पुत्र का पाकिस्तानी लकड़ी के साथ ऑनलाइन निकाह पक्का हो गया है। जौनपुर में दूल्हा पक्ष और लौहार में दुल्हन पक्ष ने ऑनलाइन वीडियो कॉल पर कबूल है, कबूल है, बोलकर निकाह क़बूल कर लिया। तकनीक उत्तम उपयोग।😊👍👌 pic.twitter.com/KSAMXPC0l2
— KESHAV PRAJAPATI (@k_pvaranasi) October 20, 2024
பாஜக கார்ப்பரேட்டர் தஹ்சீன் ஷாஹித் அவரது மூத்த மகன் முகமது அப்பாஸ் ஹைதரின் திருமணத்தை பாகிஸ்தானில் உள்ள லாகூரில் வசிக்கும் அன்ட்லீப் சஹ்ராவுடன் நடத்தியுள்ளார் என்று PTI செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையே நிலவும் அரசியல் சூழல் காரணமாக மணமகன் விசா பெற முடியாமல் போனதாகவும், மணப்பெண்ணின் தாயார் உடல் நிலை சரி இல்லாமல் பாகிஸ்தானில் ஐசியுவில் அனுமதிக்கப்படுள்ளதாகவும், இந்த திருமணம் ஆன்லைன் நிக்கா மூலம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க சிறுநீர் சப்பாத்தி; வைரலான வீடியோ: சிக்கிய பணிப்பெண்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com