அந்தப் பட்டியலில் ராஜமாதா சிவகாமி? ரசிகர்கள் அதிர்ச்சி!

Ranya Krishnan | நடிகை ரம்யா கிருஷ்ணன் தனது கணவர் வம்சியுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Published on: October 20, 2024 at 4:56 pm

Ranya Krishnan | இந்திய திரை உலகில் நடிகர் நடிகைகள் சேர்ந்து வாழ்வதும் பின்னர் விவாகரத்து என்ற பெயரில் பிரிவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு பல நடிகர் நடிகைகளின் வாழ்க்கைகள் உதாரணமாக உள்ளன.
இந்த நிலையில் நடிகை ரம்யா கிருஷ்ணனை சுற்றியும் ஒரு வதந்தி பரவி வருகிறது. அதில் அவர் கணவர் வம்சியை விவாகரத்து செய்யப் போகிறார் என கூறப்படுகிறது. இந்த தகவல் உண்மையா அல்லது வதந்தியா என பல்வேறு தரப்பினரும் இணையத்தில் தேடி வருகின்றனர்.

1980 காலகட்டங்களில் சினிமாவில் அறிமுகமாகி, தனக்கென தனி முத்திரை பதித்து இன்றளவும் நடிகையாக வலம் வருபவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். அறிமுக முதலே ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது சினிமாவில் இரண்டாம் கதாநாயகியாக நடிப்பது, குணச்சித்திர வேடங்களில் தொடர்வது என பிசியாக நடித்து வந்தார்.

பின் நாட்களில் இவரின் நடிப்பில் மாபெரும் கவனம் ஈர்த்த படமாக படையப்பா திகழ்ந்தது. இந்தப் படத்தில் ரஜினிகாந்துக்கு நிகரான ஓர் வில்லியாக படத்தில் நடித்திருப்பார். படையப்பா வயசானாலும் உன் ஸ்டைலும் அழகும் இன்னும் குறையல என அவர் பேசிய வசனங்கள் இன்றளவும் மாஸ்.

இந்த நிலையில் சில பல ஆண்டுகளுக்கு பின்னர் அவர் பாகுபலி திரைப்படத்தில் ராஜமாதா சிவகாமியாக நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவரின் தோரலை கர்ஜனை நிஜ ராணியை கண்முன் கொண்டு நிறுத்தியது.
அதன் பின்னர் மலையாளம் தெலுங்கு என தொடர்ச்சியாக சில படங்களில் நடித்து வந்தார்.

இந்த நிலையில் சமீப காலமாக நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது கணவர் வம்சியுடன் சேர்ந்து வாழ வில்லை என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் இருவரும் பொது நிகழ்ச்சிகளில் ஒன்றாக கலந்து கொள்வதில்லை எனவும் அந்த தகவல் நீள்கிறது. இதை வைத்து இருவரும் பிரிய போவதாக இணையதளத்தில் சிலர் கருத்துக்கள் தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்த வதந்தி காட்டு தீ போல் பரவிய நிலையில் இதற்கு அவரது கணவர் வம்சி பதிலளித்துள்ளார். அதில் இது மிகவும் வேடிக்கையாக உள்ளது; என் காதுகளுக்கும் இது போன்ற தகவல்கள் வந்தன. ஆனால் இதில் துளியும் உண்மை இல்லை” என மறுத்துள்ளார். நடிகை ரம்யா கிருஷ்ணனின் விவாகரத்து குறித்த வதந்திகள் இணையதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இதையும் படிங்க மீண்டும் தனுஷ் படத்தில் நித்தியா மேனன்; அவரே வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல.. மாளவிகா மோகனன்!

கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல.. மாளவிகா மோகனன்!

Malavika Defends Glamour : “கவர்ச்சி என்பது தவறான விஷயம் அல்ல” என நடிகை மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்….

ஜனநாயகன் படத்தில் TVK வசனம் நீக்கப்பட்டது ஏன்? படக்குழு விளக்கம்! Jana Nayagan Dialogue Change Explained

ஜனநாயகன் படத்தில் TVK வசனம் நீக்கப்பட்டது ஏன்? படக்குழு விளக்கம்!

Jana Nayagan Dialogue Change Explained : ஜனநாயகன் திரைப்படத்தில் அம்பேத்கர் மற்றும் டி.வி.கே வசனம் நீக்கப்பட்டது ஏன் என்பது குறித்து படக்குழு விளக்கம் அளித்துள்ளது….

3 இடியட்ஸ் படத்தின் கதாநாயகன் சோனம் வாங்சுக்? அமீர் கான் பரபரப்பு பதில் Aamir Khan

3 இடியட்ஸ் படத்தின் கதாநாயகன் சோனம் வாங்சுக்? அமீர் கான் பரபரப்பு பதில்

Aamir Khan: சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்….

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன் SK Praises Anbe Diana Team

இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன்

SK Praises Anbe Diana Team : அன்பே டயானா படக்குழுவினரை சிவ கார்த்திகேயன் வெகுவாக பாராட்டியுள்ளார்….

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட செய்யுங்கள்.. பாடகி சின்மயி கோரிக்கை Chinmayi

சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட செய்யுங்கள்.. பாடகி சின்மயி கோரிக்கை

Chinmayi: யாராஞ்சும் சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை கைவிட செய்யுங்கள் என பாடகி சின்மயி வேண்டுகோள் விடுத்துள்ளார்….

ஜனநாயகன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எப்போது தெரியுமா? Jana Nayagan release date

ஜனநாயகன் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. எப்போது தெரியுமா?

Jana Nayagan release date : நடிகர் விஜயின் ஜனநாயகன் திரைப்படம் ஜூலை 23ஆம் தேதி தியேட்டர்களில் வெளியாகும் என்ற தகவல் வெளியாகியுள்ளது….

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com