Bihar: பீகாரில் 80 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக பாரதிய ஜனதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Bihar: பீகாரில் 80 ஆயிரம் இஸ்லாமிய வாக்காளர்களை நீக்க முயற்சித்ததாக பாரதிய ஜனதா மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
Published on: September 29, 2025 at 4:31 pm
Updated on: September 29, 2025 at 4:35 pm
பாட்னா, செப்.29, 2025: பீகாரின் கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள டாக்கா தொகுதியில் கிட்டத்தட்ட 80,000 முஸ்லிம் வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க பாஜக பலமுறை முயற்சித்ததாக ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவ் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
அந்த அறிக்கையில், “பாட்னாவில் உள்ள பாஜகவின் மாநில தலைமையகத்திலிருந்து மாநில தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு (CEO) அனுப்பப்பட்ட அதிகாரப்பூர்வ கடிதமும் இணைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில் முஸ்லிம்களை குறிவைத்து, அவர்கள் இந்திய குடிமக்கள் அல்ல என்று கூறி, பெருமளவில் வாக்காளர்களை நீக்கக் கோருகிறது.
இதையும் படிங்க : இந்திய அணிக்கு வாழ்த்து தெரிவிக்காதது ஏன்? காங்கிரஸூக்கு பா.ஜ.க கேள்வி
இந்த முயற்சியை தொகுதி பாஜக எம்.எல்.ஏ பவன் குமார் ஜெய்ஸ்வாலின் தனிப்பட்ட உதவியாளரான தீரஜ் குமார் என்பவர் முதன்முதலில் செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பான விசாரணையில், பாஜக வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க விரும்பும் கிட்டத்தட்ட 80,000 வாக்காளர்களில், எம்எல்ஏ பவன் ஜெய்ஸ்வாலின் கிராமமான ஃபுல்வாரியா கிராமமும் வருகிறது.
இந்தக் கிராம பஞ்சாயத்தில்தான் சர்பஞ்ச் ஃபிரோஸ் ஆலமின் முழு குடும்பத்தினரும் உள்ளனர். இந்நிலையில், இவர்களையும் நீக்க பா.ஜ.க கோருகிறது என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
மேலும், பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள்தொகை கொண்ட சந்தன்பரா கிராமமும் உள்ளது என்றும் காங்கிரஸ் தரப்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
முஸ்லிம்-யாதவ் மக்கள்தொகையுடன், இந்தோ-நேபாள எல்லையில் உள்ள ஒரு தொகுதியான டாக்கா, வரலாற்று ரீதியாக காங்கிரசின் கோட்டையாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : பட்டியல் சாதியினர் குறி.. குழு குழுவாக பிரிந்து மதமாற்றம்.. முக்கிய நபரை தூக்கிய போலீஸ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com