பீகார் சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு.. நவ.14 ரிசல்ட்.. யாருக்கு அதிக எம்.எல்.ஏ பலம்? திடீர் கவனம் ஈர்த்த ஆம் ஆத்மி!

Bihar Election 2025 Date: பீகார் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் இன்று (அக்.6, 2025) தெரிவித்துள்ளது.

Published on: October 6, 2025 at 5:16 pm

பாட்னா, அக்.6, 2025: இந்திய தேர்தல் ஆணையம் (ECI) இன்று (திங்கள்கிழமை) பீகார் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை மாலை 4 மணிக்கு மேல் அறிவித்தது. 243 உறுப்பினர்களைக் கொண்ட மாநில சட்டமன்றத்தின் பதவிக்காலம் நவம்பர் 22 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

முன்னதாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் வாக்களிக்கும் வகையில், சத் பண்டிகைக்குப் பிறகு உடனடியாக தேர்தல்களை நடத்த வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருந்தன. இந்த நிலையில், தேர்தல் தேதி அறிவிப்பு, தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் சந்திப்பைத் தொடர்ந்து நடந்தது.

இதையும் படிங்க : லாலு மகன் 9ஆம் வகுப்பு கூட தேர்ச்சி பெறவில்லை.. பிரசாந்த் கிஷோர்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் சேர்ந்து பீகார் மாநில தேர்தல் தேதியை அறிவித்தனர்.

பீகார் தேர்தல் தேதி

இந்த நிலையில் இந்தியத் தேர்தல் ஆணையம் பீகார் சட்டமன்ற தேர்தல் தேதியை அறிவித்தது. அதன்படி, தேர்தலானது நவம்பர் 6ஆம் தேதி முதல் நவம்பர் 11ஆம் தேதி வரை இரண்டு கட்டங்களாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தல் முடிவுகள் நவம்பர் 14ஆம் தேதி வெளியாகிறது.

கட்சிகள் கூட்டணி

இதற்கிடையில், இந்தியா மற்றும் என்.டி.ஏ கூட்டணிகளுக்கான இடப் பங்கீடு இந்த வார இறுதியில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியை பொறுத்தவரை ஆளுங்கட்சியான நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்துடன் இணைந்து தேர்தலை சந்திக்கிறது.

ஆம் ஆத்மி வேட்பாளர்கள் அறிவிப்பு

பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான 11 வேட்பாளர்களின் முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை அறிவித்தது. கெஜ்ரிவால் தலைமையிலான கட்சி பாட்னா, பெகுசராய், தர்பங்கா, கிஷன்கஞ்ச் மற்றும் மோதிஹரி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கான வேட்பாளர்களை அறிவித்தது.

தற்போதைய எம்.எல்.ஏ.க்கள் பலம்

243 உறுப்பினர்களைக் கொண்ட சட்டமன்றத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி தற்போது 131 இடங்களைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், காங்கிரஸின் மகாபந்தன் 111 இடங்களைக் கொண்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) முகாமில், பாரதிய ஜனதா கட்சி 80 இடங்களையும், ஐக்கிய ஜனதா தளம் (JD(U) 45 இடங்களையும், ஜிதன் ராம் மஞ்சியின் ஹிந்துஸ்தான் அவாமி மோர்சா (HAM(S) 4 இடங்களையும் கொண்டுள்ளது. மேலும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இரண்டு சுயேச்சைகளின் ஆதரவும் உள்ளது.

காங்கிரஸின் மகாபந்தன் முகாமில், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு 77 எம்எல்ஏக்கள், காங்கிரஸ் 19, சிபிஐ (எம்எல்) 11, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 2, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

இதையும் படிங்க : ராகுல், சோனியா மீது வழக்கு: பீகாரில் ரயிலை மறித்த காங்கிரஸார்!

மிதுன ராசிக்கு புதிய தொழில்.. 12 ராசிகளின் இன்றைய (நவ.14, 2025) பலன்கள்! Today rasipalan prediction for all zodiac signs

மிதுன ராசிக்கு புதிய தொழில்.. 12 ராசிகளின் இன்றைய (நவ.14, 2025) பலன்கள்!

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.14, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…

கமல் தயாரிப்பில் ரஜினி.. சுந்தர் சி எஸ்கேப்.. பரபரப்பில் கோடம்பாக்கம்! Director Sundar C

கமல் தயாரிப்பில் ரஜினி.. சுந்தர் சி எஸ்கேப்.. பரபரப்பில் கோடம்பாக்கம்!

Director Sundar C: நடிகரும் மாநிலங்களவை எம்.பி.யுமான கமல்ஹாசன் தயாரிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருந்த தலைவர் 173 படத்தில் இருந்து இயக்குனர் சுந்தர் சி விலகினார்….

Bison OTT release: துருவ் விக்ரமின் பைசன் ஒ.டி.டி. அறிவிப்பு.. எந்தத் தளம் தெரியுமா? Bison OTT release

Bison OTT release: துருவ் விக்ரமின் பைசன் ஒ.டி.டி. அறிவிப்பு.. எந்தத் தளம்

Bison OTT release: மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாகிறது….

மேஷம் கடன் வாங்க வேண்டாம்.. 12 ராசிகளின் இன்றைய (நவ.13, 2025) பலன்கள்! Today rasipalan prediction for all zodiac signs

மேஷம் கடன் வாங்க வேண்டாம்.. 12 ராசிகளின் இன்றைய (நவ.13, 2025) பலன்கள்!

Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (நவ.13, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…

பீகாரில் யார் ஆட்சி.. டுடேஸ் சாணக்யா கருத்துக் கணிப்பு.. அதிரடி திருப்பம்! Bihar election 2025

பீகாரில் யார் ஆட்சி.. டுடேஸ் சாணக்யா கருத்துக் கணிப்பு.. அதிரடி திருப்பம்!

Bihar election 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் யார் வெற்றி பெறுவார் என்பது தொடர்பாக சாணக்யா கருத்துக் கணிப்புகள் இன்று (புதன்கிழமை) வெளியாகியுள்ளன….

2013ல் திடீர் மாயம்.. 2015ல் திருமணம்- விவாகரத்து.. யார் இந்த பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத்? Who is Shaheen Shaheed

2013ல் திடீர் மாயம்.. 2015ல் திருமணம்- விவாகரத்து.. யார் இந்த பெண் மருத்துவர்

Who is Shaheen Shaheed: டெல்லி செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்டுள்ள பெண் மருத்துவர் ஷாஹீன் ஷாஹீத் குறித்து பல அதிர்ச்சிகர தகவல்கள்…

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com