மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா படுதோல்வியை சந்தித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நடந்து முடிந்த தேர்தலில் உத்தவ் பிரிவு சிவசேனா படுதோல்வியை சந்தித்துள்ளது.
Published on: November 25, 2024 at 9:24 pm
Maharashtra | மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜக, சிவ சேனா தேசியவாத காங்கிரஸ் அடங்கிய மகாயுகி கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது. சிவசேனா பிளவுக்கு பிறகு நடைபெற்ற இந்த சட்டசபை தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா படுதோல்வியை சந்தித்துள்ளது. சுமார் 95 இடங்களில் போட்டியிட்ட சிவசேனா வெறும் 20 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. அதே நேரம் ஷின்டே தலைமையிலான சிவசேனா 57 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் வெற்றி பெற்ற சட்டசபை உறுப்பினர்களின் கூட்டம் மும்பையில் உத்தவ் தாக்கரே இல்லத்தில் நடைபெற்றது. இதில் ஆதித்ய தாக்கரே சிவசேனா கட்சியின் இரு அவைகளின் சட்டமன்ற தலைவராக ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் மாநிலங்களவைக்கு கட்சியின் குழு தலைவராக முன்னாள் அமைச்சர் பாஸ்கர் ஜாதவ் மற்றும் தலைமை கொறடாவாக சுனில் பிரபு நியமிக்கப்பட்டுள்ளார்.
வோர்லி தொகுதியில் கடந்த தேர்தலில் 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆதிய தாக்கரே இந்த முறை வெறும் 8801 வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க ‘மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பாராளுமன்றத்தை சீர்குலைக்க முயற்சி’: பிரதமர் நரேந்திர மோடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com