ஐ.சி.சி தஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
ஐ.சி.சி தஉலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ரவரிசைப் பட்டியலில் இந்தியா மீண்டும் முதலிடம் பிடித்துள்ளது.
Published on: November 25, 2024 at 8:05 pm
ICC World Test Championship Points | இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் நடைபெற்றது. கடந்த 22 ஆம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் பும்ரா கேப்டன்சியில் விளையாடிய இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. இதில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியின் போது முதலிடத்தில் இருந்து இறங்கிய இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அபார வெற்றியின் மூலம் மீண்டும் முதல் இடத்தை பெற்றுள்ளது.
இந்திய அணி 61.11 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியா – 59.69 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இலங்கை – 55.56 புள்ளிகளுடன் 3ஆம் இடத்திலும் உள்ளது.
நியூசிலாந்து – 54.55, தென் ஆப்பிரிக்கா – 54.17, இங்கிலாந்து – 40.79, பாகிஸ்தான் – 33.33,வங்காளதேசம் – 27.50, வெஸ்ட் இண்டீஸ் – 18.52 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.
இதையும் படிங்க ‘பணம் பிரச்னை அல்ல’.. டெல்லி அணியில் இருந்து வெளியேறியது ஏன்? ரிஷப் பந்த் பதில்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com