Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Naxals shot dead in Chhattisgarh | சத்தீஸ்கரின் தெற்கு பிஜாப்பூரில் உள்ள ஒரு காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை வெடித்தது. இதில், 12 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
Published on: January 16, 2025 at 10:19 pm
சத்தீஸ்கரில் 12 நக்சல்கள் சுட்டுக்கொலை : சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் மாவட்டத்தில் வியாழக்கிழமை (ஜன.16, 2025) பாதுகாப்புப் படையினருடன் நடந்த கடுமையான மோதலில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாநிலத்தின் தெற்கு பிஜாப்பூர் காட்டில் காலை 9 மணியளவில் துப்பாக்கிச் சண்டை தொடங்கியது. இந்நிலையில், பாதுகாப்புப் படையினரின் கூட்டுக் குழு நக்சலைட் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டது.
இந்த துப்பாக்கிச் சண்டை மாலை வரை இடைவிடாது நடந்தது. இதில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதாக காவல்துறை மூத்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த நக்சல் ஒழிப்பு பணியில், மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாநில காவல்துறையின் மாவட்ட ரிசர்வ் காவல்படை, ஐந்து பட்டாலியன்கள் கோப்ரா (கமாண்டோ பட்டாலியன் ஃபார் ரெசால்யூட் ஆக்ஷன் மற்றும் 229வது சி.ஆர்.பி.எஃப் பட்டாலியன் படைகள் ஈடுபட்டிருந்தன. இந்தப் பணியில் முதற்கட்ட தகவலின்படி, துப்பாக்கிச் சண்டையில் 12 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டனர். அப்பகுதியில் இன்னும் தேடுதல் நடவடிக்கை நடந்து வருகிறது.
மேலும், அந்த அதிகாரி பாதுகாப்புப் படையினருக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்தார். இந்த மாதத்தில் இதுவரை மாநிலத்தில் தனித்தனி என்கவுன்டர்களில் 26 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com