Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.
Delhi assembly elections 2025: டெல்லியில் காங்கிரஸ் வாக்குறுதிகளை அள்ளி வீசியுள்ளது. இதில் முக்கியமாக ரூ.500க்கு எல்.பி.ஜி சிலிண்டர் கொடுப்போம் எனத் தெரிவித்துள்ளது.
Published on: January 16, 2025 at 10:05 pm
Updated on: January 17, 2025 at 9:37 am
டெல்லி காங்கிரஸ் தேர்தல் அறிக்கை | டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 5 வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்று தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி வியாழக்கிழமை (ஜன.16, 2025) அறிவித்தார்.
இதில், ரூ.500 விலையில் எல்பிஜி சிலிண்டர்கள், 300 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடியிருப்பாளர்களுக்கு இலவச ரேஷன் கிட்கள் ஆகியவை முக்கிய வாக்குறுதிகள் ஆகும்.
இதற்கிடையில், ‘மெஹங்கை முக்த் யோஜனா’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி, ரேவந்த் ரெட்டி ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்
மேலும் காங்கிரஸ் பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,500 பண மானியம் வழங்குவதாகவும் உறுதியளித்தது.
அடுத்து, 25 லட்சம் வரை இலவச சுகாதார காப்பீட்டை வழங்குவதை நோக்கமாகக் கொண்ட ‘ஜீவன் ரக்ஷா யோஜனா’ திட்டத்தையும் காங்கிரஸ் அறிவித்துள்ளது.
தொடர்ந்து, டெல்லியில் படித்த மற்றும் வேலையில்லாத இளைஞர்களுக்கு மாதம் ரூ.8,500 வழங்குவதாகவும் உறுதியளித்தது.
दिल्ली में कांग्रेस की सरकार बनाइए। हम अपने वादे निभाकर दिखाएंगे।
— Congress (@INCIndia) January 16, 2025
यह मैं इसलिए कह रहा हूं कि क्योंकि शीला दीक्षित जी ने 15 साल में दिल्ली में विकास करके दिखाया है।
मोदी-केजरीवाल में कोई अंतर नहीं है, क्योंकि दोनों का काम सिर्फ झूठ बोलना है। दिल्ली की जनता ने मोदी और केजरीवाल… pic.twitter.com/77ffwdbqDq
டெல்லியில் பிப்.5ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. முடிவுகள் பிப்.8ஆம் தேதி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com