NEET UG 2025 Exam Format | 2025 நீட் இளங்கலை (NEET UG 2025) தேர்வு பேனா-காகித முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
NEET UG 2025 Exam Format | 2025 நீட் இளங்கலை (NEET UG 2025) தேர்வு பேனா-காகித முறையில் நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை (NTA) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
Published on: January 16, 2025 at 10:40 pm
2025 நீட் இளங்கலை தேர்வு | தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு முகமை நீட் இளங்களை (NEET UG 2025) தேர்வை பேனா மற்றும் காகித முறையில் (ஓ.எம்.ஆர் அடிப்படையிலான) ஒரே நாள் மற்றும் ஒற்றை ஷிப்டில் நடத்தப்படும் என்ற முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த முடிவு தேசிய மருத்துவ ஆணையம் (என்.எம்.சி) வகுத்துள்ள வழிகாட்டுதல்களுடன் ஒத்துப்போகிறது.
முன்னதாக, கடந்த மாதம் 2025 ஆம் ஆண்டுக்கான நீட் இளங்கலை மருத்துவ நுழைவுத் தேர்வு பேனா மற்றும் காகித முறையில் நடத்தப்படுமா அல்லது கணினி அடிப்படையிலான தேர்வு (சி.பி.டி) முறையில் நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்தது.
இதற்குப் பதிலளித்த ல்வி மற்றும் சுகாதார அமைச்சகங்கள், இது தொடர்பாக இன்னும் முடிவு செய்யவில்லை என்று தெரிவித்து இருந்தன. இதற்கிடையில் இந்த அறிவிப்பு வெனியாகி உள்ளது.
இந்த நிலையில், தற்போது தேர்வு வழக்கம் போல் பேனா மற்றும் காகித வடிவத்தில் தொடரும் என்பது உறுதிப்படுத்தப்பட்டு உள்ளது.
மேலும், 2025 ஆம் ஆண்டுக்கான ஆயுதப்படை மருத்துவ சேவை மருத்துவமனைகளில் நடத்தப்படும் பி.எஸ்சி. நர்சிங் படிப்புகளில் சேர விரும்பும் எம்.என்.எஸ் (இராணுவ நர்சிங் சேவை) விண்ணப்பதாரர்களும் நீட் (யுஜி) தேர்வுக்கு தகுதி பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
அந்த வகையில், 4 ஆண்டு பி.எஸ்சி. நர்சிங் படிப்பிற்கான தேர்வுக்கு நீட் (யுஜி) மதிப்பெண் பயன்படுத்தப்படும்.
இந்தத் தேர்வு 3 மணி நேரம் 20 நிமிடங்கள் நடைபெறும். இதில் 200 கேள்விகள் உள்ளன, அவற்றில் மாணவர்கள் 180 கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.
ஒவ்வொரு சரியான பதிலுக்கும், ஒரு மாணவருக்கு நான்கு மதிப்பெண்களும், ஒவ்வொரு தவறான பதிலுக்கும் ஒரு மதிப்பெண் எதிர்மறை மதிப்பெண்ணும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com