கொய்யா இலை சாப்பிட்டா உடல் எடை குறையுமா? உண்மை என்ன?

Health | கொய்யா இலையில் பல்வேறு மருத்துவ குணங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

Published on: October 15, 2024 at 2:25 pm

Health | உடலுக்கு ஆரோக்கியம் தரும் பழ வகைகளில் ஒன்று கொய்யாப்பழம் என்பது நாம் அறிந்ததே ஆனால் கொய்யா மரத்தின் இலையில் நான் வியக்கும் அளவிற்கு ஏராளமான சத்துக்கள் உள்ளது. கொய்யா இலையில் மறைந்துள்ள சத்துக்களை பற்றி பார்க்கலாம். கொய்யா இலையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் காணப்படுகிறது. இது பல நோய்களிலிருந்து நம்மை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

உடல் எடையினை குறைக்க கொய்யா இலை முக்கிய பங்கு வைக்கிறது. கொய்யா இலையில் உள்ள பயோ ஆக்டிவ் கலவைகள் உடலில் உள்ள சர்க்கரை மற்றும் கலோரிகளின் அளவை குறைப்பதால் உடல் எடையை குறைக்க பயன்படுகிறது. கொய்யா இலை தேநீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள இன்சுலின் உற்பத்தியை குறைத்து இரத்த சர்க்கரை அளவை குறைக்க உதவுகிறது.

மேலும் கொய்யா இலை தேநீர் அல்லது கொய்யா இலை சாறு அருந்தும் பொழுது செரிமான நொதி உற்பத்தியை அதிகரித்து உணவு நச்சின் உற்பத்தியை குறைக்க பயன்படுகிறது. கொய்யா இலையை நீரில் கொதிக்க வைத்து தண்ணீர் குளிர்ந்ததும் தலையில் மசாஜ் செய்து வருவதன் மூலம் முடி உதிர்தல் நின்று முடி நன்கு பலம் பெரும்.

மேலும் தலைக்கு தேய்க்க கூடிய எண்ணெயில் கொய்யா இலையை சேர்த்து பயன்படுத்தலாம். கொய்யா இலையில் உள்ள விட்டமின் சி முகப்பரு வராமல் தடுக்கிறது. பல் ஈறுகளில் வீக்கம் மற்றும் பல் ஈறுகளில் ரத்தப்போக்கு போன்ற பிரச்னைகள் இருந்தால் அதனை குணப்படுத்தவும் கொய்யா இலை பயன்படுகிறது.

இதையும் படிங்க : மாதவிடாய் வயிற்று வலியால் அவதியா? இதை செஞ்சு பாருங்க!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com