வெங்காயத்தில் சூப்பர் கிரேவி ஈசியாக செய்யலாம்.. சப்பாத்திக்கு செம்மையா இருக்கும்..!

Food: எப்போதும் ஒரே மாதிரியாக குருமா செய்யாமல் புதிதாக இந்த ஆனியன் கிரேவியை செய்து பாருங்கள். சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும். அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

Published on: April 29, 2025 at 2:05 pm

சென்னை, ஏப்.29 2025: சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான ஆனியன் கிரேவி எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.

தேவையான பொருள்கள்

எண்ணெய் -3 டேபிள்ஸ்பூன்
பெரிய வெங்காயம் -4
சீரகம் -½ டீஸ்பூன்
தக்காளி -2
இஞ்சி பூண்டு விழுது-1½
தயிர் -2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
மல்லித்தூள் -1½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீ ஸ்பூன்
கரம் மசாலா – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் -½ டீஸ்பூன்
சர்க்கரை -¼ டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லி இலை – சிறிதளவு

செய்முறை

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் பெரிய துண்டுகளாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி வேறு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். வெங்காயம் சிறிது வதங்கினால் போதுமானது. அதே கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதில் சீரகம் சேர்த்து பொரிய விட வேண்டும்.

இதையும் படிங்க: நன்னாரி சர்பத், வெண்ணிலா ஐஸ்கிரீம் போதும்.. வீட்டிலேயே ஜில் ஜில் ஜிகர்தண்டா.. இந்த ட்ரிக்க ஃபாலோ பண்ணுங்க!

பின்னர் இதனுடன் பொடியாக நறுக்கிய இரண்டு பெரிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கி பொன்னிறமாக மாறிய பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தக்காளியை சேர்த்து விழுதாக அரைத்து இதனுடன் சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வெந்த பின்னர் இதனுடன் இஞ்சி பூண்டு விழுதுகளை சேர்த்து கலந்து விடவும். விழுதின் பச்சை வாடை நீங்க பின்னர் இதனுடன் கெட்டி தயிர் சேர்த்து கலந்து விடவும்.

பின்னர் இதனுடன் மிளகாய் தூள், மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து கலந்து விடவும். கிரேவிக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிரேவியை கொதிக்க விடவும். கிரேவி நன்கு கொதித்த பின்னர் இதனுடன் ஏற்கனவே வதக்கி வைத்த வெங்காயம் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும். இறுதியாக சர்க்கரை மற்றும் சிறிது கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும் இப்போது சுவையான ஆனியன் கிரேவி தயார். இதை சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

இதையும் படிங்க: முருங்கை காயில் இப்படி ஓர் தொக்கா? டேஸ்ட் அள்ளும், செஞ்சு அசத்துங்க!

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக் கல்வித்துறைக்கு வானதி சீனிவாசன் வேண்டுகோள்
Vanathi Srinivasan

மாணவர்களுக்கு முதலில் நல்ல ஒழுக்கத்தையும், பாலியல் கல்வியையும் கற்றுத் தர வேண்டும்… பள்ளிக்

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்க வேண்டும்..அன்புமணி ராமதாஸ்
Anbumani Ramadoss

5 லட்சத்தைக் கடந்த அரசுத்துறை காலிப் பணியிடங்கள்.. உடனே நிரப்பி இளைஞர்களுக்கு அரசு

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை.. டிடிவி தினகரன்
TTV Dinakaran

அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர் சிகிச்சை அளிக்கும் அவலம்.. உடனடி நடவடிக்கை தேவை..

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

Recent Post

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com