How to make navrathri special Orange Motichoor Laddu | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று லட்டு. தீபாவளி, நவராத்திரி போன்ற பண்டிகை காலங்களில் வீடுகளில் செய்யக்கூடிய இனிப்பு வகைகளில் ஒன்று ஆரஞ்சு கலர் மோத்திசூர் லட்டு. நவராத்திரி ஸ்பெஷல் மோத்தி லட்டு எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
கடலை மாவு – 1 கப் உப்பு – 1/4 ஸ்பூன் ஆரஞ்சு ஃபுட் கலர் – சிறிதளவு தண்ணீர்- தேவையான அளவு எண்ணெய் – தேவையான அளவு சக்கரை -1கப் நெய் – 3 ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் கடலை மாவு எடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனுடன் உப்பு, ஃபுட் கலர் மற்றும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கட்டி விழாமல் நன்கு கலக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் பூந்தி கரண்டியின் மேல் கரைத்து வைத்த மாவை ஊற்றி பூந்தி கரண்டியை வேகமாக தட்டி மாவு எண்ணெயில் விழும்படி செய்து பொரித்து எடுக்க வேண்டும். இது வேகமாக பொரிந்துவிடும்.
மாவு பொரிந்ததும் ஒரு சில்வர் வடிகட்டி மூலம் எடுத்து ஒரு ஜல்லி கரண்டியில் மாற்றி எண்ணையை வடித்து எடுக்க வேண்டும். மீதமுள்ள எண்ணெயை வடிக்க டிஷ்யூ பேப்பர் மீது வைக்க வேண்டும்.
பின்னர் ஒரு கடாயில் மாவு அளந்த அதே கப்பில் ஒரு கப் சர்க்கரை சேர்க்க வேண்டும். இதனுடன் சிறிது ஆரஞ்சு ஃபுட் கலர் மற்றும் 3/4 கப் அளவு தண்ணீர் சேர்த்து பாகு தயாரிக்க வேண்டும். பாகு ஐந்து நிமிடம் கொதித்ததும் இதனுடன் ஏற்கனவே பொரித்து வைத்த பூந்தியை சேர்க்க வேண்டும்.
பூந்தி சேர்க்கும் பொழுது அடுப்பு தீயை சிம்மில் வைத்க வேண்டும். இதனை 10 நிமிடம் நன்கு கிளறி விட வேண்டும்.
இதனுடன் சிறு துண்டுகளாக நறுக்கிய முந்திரி பருப்பு, நெய் மற்றும் சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
பின்னர் அடுப்பை ஆப் செய்து 15 நிமிடம் மூடி வைக்க வேண்டும். கை பொறுக்கும் சூட்டிற்கு வந்த பிறகு உருண்டை பிடித்து வைக்க வேண்டும் இப்பொழுது சுவையான ஆரஞ்சு மோத்திசூர் லட்டு ரெடி.
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.