How to make navrathri special adhirasam | நவராத்திரி 2024 தொடங்கியுள்ள நிலையில், வெங்கடேஷ் பட் ஸ்டைலில் அதிரசம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பச்சரிசி -300 கிராம்
தண்ணீர் – 2 டம்ளா்
நாட்டு சக்கரை – 1 (1|2) கப்
கடலை எண்ணெய் – தேவையான அளவு
ஏலக்காய் தூள் -1 சிட்டிகை
சுக்குத்தூள் – அரை சிட்டிகை
நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்
நெய் – சிறிதளவு
செய்முறை
முதலில் ஒரு கப் பச்சரிசியை இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். பின் அதை வடிகட்ட வேண்டும். ஈரப்பதத்துடன் இருக்கும் அரிசியை மாவு போன்று அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். அரைத்து வைத்த அரிசி மாவில் இருந்து தலை தட்டி இரண்டு கப் அரிசி மாவினை எடுத்து வேறு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளவும்.
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரிசி அளந்த அதே அளவையால் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் ஒன்றரை கப் 1 (1/2) நாட்டுச் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி பாகு பதத்தில் காய்க்க வேண்டும்.
பாகுபதத்தை கண்டறிய ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக் கொண்டு அதனுடன் ஒரு துளி காய்த்த பாகினை சேர்க்கும் பொழுது பாகு நீரில் கரையாமல் இருக்கும். இது சரியான பதம் ஆகும். அடுப்பு தீயை சிம்மில் வைத்து பாகுடன் அளந்து வைத்த அரிசி மாவு, ஏலக்காய் தூள், சுக்கு தூள் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இதனுடன் மீண்டும் இரண்டு கைப்பிடி அளவு அரிசி மாவு சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
இந்த கலவையை வேறு பாத்திரத்தில் மாற்றி அதில் சிறிது நல்லெண்ணெய் சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். பின்னா் இதனுடன் சிறிது நெய் சேர்த்து 10 முதல் 12 மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். மாவு நன்கு ஊறிய பின் சப்பாத்தி மாவு பதத்தில் இருக்கும். இதை வடை போன்று தட்டி எண்ணெயில் சேர்த்து அடுப்பு தீயை மீடியம் ஃப்ளேமில் வைத்து வறுத்து எடுக்க வேண்டும். இப்பொழுது சுவையான அதிரசம் தயார்.
இதையும் படிங்க
How to make vegetable momos | ரோட்டு கடையில் சாப்பிடக்கூடிய சுவையான மோமோஸ் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?…
How to make Ennai Kathirikkai Kulambu | சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் சுவையான எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு இப்படி பண்ணுங்க….
How to make egg curry | இட்லி, தோசை, சப்பாத்தி போன்ற அனைத்துடனும் சேர்த்து சாப்பிடக்கூடிய சுவையான முட்டை கறி இப்படி செய்து பாருங்கள்….
How to make semiya kuzhipaniyaram | சுவையான சேமியா குழிப்பணியாரம் இப்படி செஞ்சு பாருங்க….
How to make egg gravy | அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சுவையான நார்த் இந்தியன் முட்டை கிரேவி இப்படி பண்ணுங்க….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்