Food: அனைவருக்கும் விருப்பமான குஸ்கா பாய் வீட்டு சுவையில் இப்படி செஞ்சி அசத்துங்க. இதை பள்ளி சொல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து விடலாம்.
Food: அனைவருக்கும் விருப்பமான குஸ்கா பாய் வீட்டு சுவையில் இப்படி செஞ்சி அசத்துங்க. இதை பள்ளி சொல்லும் குழந்தைகளுக்கு லஞ்சுக்கு கொடுத்து விடலாம்.
Published on: June 26, 2025 at 1:24 pm
பாய் வீட்டு சுவையில் குஸ்கா எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பாஸ்மதி அரிசி -1 கப்
எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்
நெய் -2 டேபிள் ஸ்பூன்
பிரியாணி இலை -1
கிராம்பு -3
ஏலக்காய் -4
பட்டை -2 துண்டு
பெரிய வெங்காயம் -2
இஞ்சி பூண்டு விழுது -2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் -4
தக்காளி -1
புதினா இலை-1 கைப்பிடி அளவு
கொத்தமல்லி இலை-1 கைப்பிடி அளவு
மிளகாய் தூள் -1 டீஸ்பூன்
கரம் மசாலா -½ டீஸ்பூன்
மஞ்சள் தூள் -¼ டீஸ்பூன்
தயிர் -2 டேபிள்ஸ்பூன்
தண்ணீர் -1½ கப்
எலுமிச்சை சாறு -1 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி இலை -சிறிதளவு
புதினா இலை -சிறிதளவு
நெய்- டேபிள் ஸ்பூன்
செய்முறை
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் அளவு பாஸ்மதி அரிசியை இரண்டு, மூன்று முறை நன்கு கழுவிய பின் 20 நிமிடம் நீரில் ஊற வைக்க வேண்டும். பின்னர் குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் சேர்க்க வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் இதனுடன் பிரியாணி இலை, கிராம்பு, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து பொரிய விடவும். பின்னர் இதனுடன் இரண்டு பெரிய வெங்காயத்தை நீள்வாக்கில் நறுக்கி சேர்த்துக் கொள்ளவும்.
இதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கும் பொழுது வெங்காயம் வேகமாக வதங்கும். வெங்காயம் வதங்கி பொன்னிறமாக மாறியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். விழுதின் பச்சை வாடை நீங்கிய பின்னர் நீலவாக்கில் கீறிய பச்சை மிளகாய் மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி மசிந்து வெந்த பின்னர் இதனுடன் ஒரு கைப்பிடி அளவு கொத்தமல்லி இலை மற்றும் ஒரு கைப்பிடி அளவு புதினா இலை சேர்த்து கலந்து விடவும்.
இதையும் படிங்க: மூட்டு வலிக்கு சிறந்த மருந்து… ஐந்தே நிமிடத்தில் செய்யலாம் ஹெல்தியான பிரண்டைக்காய் துவையல்!
அடுப்பு தீயை லோ ஃப்ளேமில் வைத்து மிளகாய் தூள், கரம் மசாலா, மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து விடவும். மசாலாவின் பச்சை வாடை நீங்கிய பின்னர் இதனுடன் கெட்டியான புளிக்காத தயிர் சேர்த்து கலந்து விடவும். பின்னர் இதனுடன் ஒரு கப் பாஸ்மதி அரிசிக்கு ஒன்றரை(1½) கப் தண்ணீர் சேர்த்து கலந்து, ஹை ஃப்ளேமில் வைத்து தண்ணீரை கொதிக்க விடவும்.
இப்போது பிரியாணிக்கு தேவையான உப்பை சரிபார்த்துக் கொள்ளவும். உப்பு சிறிது கரிக்கும் அளவிற்கு இருக்க வேண்டும். இதனுடன் எலுமிச்சைச்சாறு சேர்த்து கலந்து விடவும். மீணடும் இதனுடன் சிறிது புதினா இலை மற்றும் நெய் சேர்க்கவும். பின்னர் இதனுடன் ஊற வைத்த அரிசியை சேர்த்து கலந்து விடவும்.
அடுப்புத்தீயை ஹை ப்ளேமில் வைத்து அரிசியை சிறிது வேக வைக்கவும். அரிசி தண்ணீரில் தெரியும் அளவு வெந்த பின்னர் லோ பிளேமில் வைத்து மூடி போட்டு பத்து நிமிடம் வேக விடவும். இப்போது சுவையான உதிரி உதிரியான குஸ்கா தயார். அடுப்பை ஆப் செய்த பின்னர் மூடி போட்டு பத்து நிமிடம் தம் வைக்கவும். இப்போது குஸ்காவை எல்லோருக்கும் பரிமாறலாம்.
இதையும் படிங்க : வெங்காயத்தில் சூப்பர் கிரேவி ஈசியாக செய்யலாம்.. சப்பாத்திக்கு செம்மையா இருக்கும்..!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com