Health | உடல் எடையை குறைப்பதில் மருத்துவர் கூறும் எளிதான சில வழிமுறைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
Health | உடல் எடையை குறைப்பதில் மருத்துவர் கூறும் எளிதான சில வழிமுறைகள் பற்றி இப்போது பார்க்கலாம்.
Published on: October 17, 2024 at 6:31 pm
Updated on: October 17, 2024 at 6:33 pm
Health | இன்றைய காலகட்டத்தில் மாமிச உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட், சிப்ஸ் போன்ற உணவுப் பொருள்களை அதிகமாக உட்கொள்வதன் மூலம் பலரின் உடல் எடை சராசரி எடையை விட அதிகரித்து காணப்படுகிறது. உடல் எடையை குறைப்பதற்கு மருத்துவர் சிவராமன் கூறும் சில அறிவுரைகளை பற்றி பார்க்கலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் பால், தயிர், வெண்ணை, நெய், பன்னீர் போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
மேலும் இனிப்பு வகைகளை அறவே தவிர்த்து விட வேண்டும். அதிலும் குறிப்பாக வெள்ளை சக்கரை முற்றிலும் தவிர்க்க வேண்டியவைகளில் ஒன்றாகும். உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அதிக சர்க்கரையை கொடுக்கும் கிழங்கு வகைகளை தவிர்ப்பது சிறந்தது. மேலும் பட்டை தீட்டிய தானியங்களான பச்சரிசி, மைதா மாவு போன்றவைகளை தவிர்க்க வேண்டும்.
நேரடியாக உடல் எடையை அதிகரிக்கும் பொருள்களான பிராய்லர் சிக்கன் போன்றவைகளை சில நாட்களுக்கு முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குளிர்ச்சியான உணவுப்பொருட்களை தவிர்த்தல் சிறந்தது. இரவு நேரங்களில் ஃப்ரிட்ஜில் இருந்து கூலிங் வாட்டர் குடிக்கும் பழக்கம் இருப்பவர்கள் இந்த பழக்கத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். ஏனெனில் குளிர்ச்சி உடலின் எடையை அதிகரிக்க செய்யும். இது போன்ற உணவு பழக்கங்களில் தெளிவான மனநிலையுடன் இருக்க வேண்டும்.
காலை எழுந்ததும் வெந்நீரில் தேன், எலுமிச்சை பழச்சாறு அல்லது வேறு ஏதேனும் பழச்சாறு கலந்து காலை பானமாக எடுத்துக் கொள்ளலாம். காலை 8 மணி அளவில் காலை உணவிற்கு பழங்கள் எடுத்துக் கொள்ளலாம் அதிலும் மாதுளை, பப்பாளி, தர்பூசணி, கொய்யா போன்ற பழ வகைகளை காலை உணவாக உட்கொள்வது சிறந்தது. காலை 11:00 மணி அளவில் கிரீன் டீ அல்லது மோர் போன்ற பானங்களை எடுத்துக் கொள்ளலாம்.
மதிய வேளையில் அரிசி, திணை அரிசி, வரகு அரிசி போன்ற தானியங்களோடு சேர்த்து காய்கறிகளும் எடுத்துக் கொள்ளலாம். அரிசி குறைவான அளவிலும் காய்கறிகள் அதிகமாகவும் எடுத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் பலகாரங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். மாலை வேளையில் பால் சேர்க்காமல் லெமன் டீ அல்லது லவங்கப்பட்டை தேனீர் போன்றவைகளை அருந்தலாம்.
எடை குறைக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள் இரவு உணவிற்கு காய்கறிகளை மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும். வெண்டைக்காய், அவரைக்காய், கேரட், பீன்ஸ் போன்ற காய்கறிகளை பொரியல் செய்து உட்கொள்வது சிறந்தது. இந்த வகையில் உட்கொள்வதன் மூலம் உடலுக்கு தேவையான சத்துக்கள் கிடைப்பதோடு உடல் எடை குறையும்.
இவற்றை தவிர்த்து காலையிலும் மாலையிலும் 45 நிமிடங்கள் நன்கு கைகளை வீசி நடை பயிற்சியில் ஈடுபட வேண்டும். மேலும் பிராணாயானம், சூரிய நமஸ்காரம் போன்ற பயிற்சிகளை செய்யும் பொழுது உடல் எடையை குறைக்கும் முயற்சியில் சோர்வு அடையாமல் களைப்பு ஏற்படாமல் நமது பணியை செய்ய முடியும். இது போன்ற வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலம் உடல் எடையினை குறைக்கலாம். மேலும் உணவியல் வல்லுநர் மற்றும் உடற்பயிற்சி ஆலோசகர் போன்றவர்களை அணுகி ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம்.
இதையும் படிங்க : சருமம் பளபளக்கும், இதய ஆரோக்கியம்: அவகோடா vs ஆலிவ்: எந்த எண்ணெய் பெஸ்ட்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com