NABARD Bank Jobs | நபார்டு வங்கி அலுவலக உதவியாளர் பணிக்கு ஆட்சேர்ப்பு நடைமுறையை துவக்கி உள்ளது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆர்வமும் தகுதியும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான nabard.org ல் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் அக்டோபர் 2ஆம் தேதி முதல் துவங்கி அக். 21 வரை சமர்ப்பிக்கலாம். அக். 21 கடைசி தேதியாகும்.
வயது வரம்பு
விண்ணப்பதாரர்கள் 18 வயது முதல் 30 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி
10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
விண்ணப்பக் கட்டணம்
பொதுப் பிரிவினர் தகவல் கட்டணம் ரூ. 50 மற்றும் விண்ணப்பக் கட்டணமாக ரூ. 500 செலுத்த வேண்டும்
எஸ்.சி, எஸ்.டி பிரிவினர், மாற்றுத் திறனாளிகள் ரூ. 50 மட்டும் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பது எப்படி?
- முதலில் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nabard.org க்குச் செல்ல வேண்டும்.
- முகப்புப்பக்கத்தில் தொழில் அறிவிப்பு டேபைக் கண்டறியவும்.
- அலுவலக உதவியாளர் விண்ணப்ப இணைப்பை ( Attendant application link) கிளிக் செய்யவும்.
- படிவத்தை சரியாக நிரப்பவும்.
- பணம் செலுத்தி சப்மிட் செய்யவும்.
- எதிர்கால குறிப்புக்காக படிவத்தை பிரின்ட் எடுத்து வைத்துக்கொள்ளவும்.
ஆன்-லைன் விண்ணப்ப சரிபார்ப்பு விதிகள் மற்றும் வடிவமைப்பு விளம்பர தேவைகளை அடிப்படையாகக் கொண்டது ஆகும். விண்ணப்பதாரர்கள் விளம்பரத்தை கவனமாகப் படித்து, முதன்மைப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள “எப்படி விண்ணப்பிப்பது” மற்றும் “FAQ” பக்கங்களைப் பார்த்து சரியாக விண்ணப்பிக்கவும்.
விண்ணப்பங்கள் அடுத்தடுத்த ஆய்வுக்கு உட்பட்டவை மற்றும் தகுதியற்றவை என கண்டறியப்பட்டால் உடனடியாக நிராகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டள்ளது. மேலும், விவரங்களுக்கு நபார்டு அதிகாரப்பூர்வ தளமான nabard.org ல் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க
SBI SEO interview admit card | எஸ்பிஐ எஸ்சிஓ நேர்காணல் அட்மிட் கார்டு டவுண்லோடு செய்வது எப்படி? நேர்காணல் எந்த அடிப்படையில் நடக்கும். விண்ணப்பதாரர்கள் தேர்வு…
SBI Clerk 2024 காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்….
Bank Jobs | பஞ்சாப் அண்ட் சிந்த் வங்கியில் பணி; கல்வித் தகுதி, சம்பளம் செக் பண்ணுங்க!…
IDBI Jobs | ஐ.டி.பி.ஐ வங்கியில் 1,000 காலி பணியிடங்கள் அறிலிக்கப்பட்டுள்ளன….
Bank Jobs | கனரா வங்கியில் இரு பணி இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்