TNPSC Group 4 Result | குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
TNPSC Group 4 Result | குரூப் 4 தேர்வு முடிவுகள் தொடர்பாக முக்கிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
Published on: October 25, 2024 at 5:52 pm
TNPSC Group 4 Result | குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியிடுவது குறித்து வரும் 28ஆம் தேதி முடிவு வெளியாகும் எனத் தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, வரும் 28ம் தேதி நடைபெறும் கூட்டத்திற்கு பிறகு, அடுத்த ஒரு சில தினங்களில் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் எனக் கூறப்படுகிறது.
2024 ஜூன் மாதம் நடைபெற்ற குரூப் 4 தேர்வை 20 லட்சம் பேர் எழுதியிருக்கின்றனர். 8,000 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வு முடிவு என்பதால் இது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் 2024 அக்டோபரில் வெளியாகி இருக்க வேண்டும். இருப்பினும், ஆணையம் இன்னும் தேதிகளை உறுதிப்படுத்தவில்லை. முன்னதாக, எழுத்துத் தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய PDF வடிவில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் நடத்தப்பட்ட முதல்நிலைத் தேர்வுக்கான குரூப் 4 முடிவுக்காக 18 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் காத்திருக்கிறார்கள். TNPSC குரூப் 4 சேவைகளின் கீழ் வெவ்வேறு பதவிகளுக்கு 6200 க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களை பணியமர்த்துவதற்காக தேர்வு நடத்தப்பட்டது.
தேர்வு முடிவு வெளியான பிறகு கட் ஆஃப் பட்டியலையும் ஆணையம் வெளியிடும். TNPSC குரூப் 4 கட் ஆஃப் என்பது அடுத்த சுற்றுக்கு தகுதி பெற விண்ணப்பதாரர்கள் பெற வேண்டிய குறைந்தபட்ச மதிப்பெண் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க சி.ஆர்.பி.எஃப்.பில் உதவி ஆய்வாளர் பணி: கல்வித் தகுதி, சம்பளம் செக் பண்ணுங்க!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com