முதல் நாளில் ₹27 கோடி வசூல்.. சூர்யாவின் விசுவநாத் அண்ட் சன்ஸ் பாக்ஸ் ஆபிஸில் எப்படி?

‘Viswanath & Sons’: நடிகர் சூர்யாவின் புதிய வரவான விசுவநாத் அண்ட் சன்ஸ் முதல் நாளில் ₹27 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Published on: August 16, 2026 at 9:30 am

சென்னை ஆகஸ்ட் 16 2026; சூர்யா நடித்த விசுவநாத் அண்ட் சன்ஸ் திரைப்படம், வெளியீட்டின் முதல் நாளில் உலகளவில் ரூ.27.51 கோடி வசூல் செய்துள்ளது. இந்தியாவில் நெட் வசூல் ரூ.15.15 கோடி என்ற நிலையில், இது அவரது முந்தைய வெற்றி கருப்பு படத்தை முந்த முடியவில்லை.

முதல் நாள் வசூல் நிலை

இந்தப் படம், இந்தியாவில் நெட் வசூல் ரூ.15.15 கோடி ஆகவும் கிராஸ் வசூல் ரூ.17.51 கோடி ஆகவும் வெளிநாட்டு வசூல் ரூ.10 கோடி ஆகவும் மொத்த உலகளாவிய வசூல் ரூ.27.51 கோடி ஆகவும் காணப்படுகிறது.

இத்திரைப்படத்தை பொருத்தமட்டில் திரைப்படம் இந்தியாவில் 5,034 காட்சிகளில் வெளியானது. தமிழில் ரூ.9.15 கோடி, தெலுங்கில் ரூ.6 கோடி வசூல் செய்தது. சென்னை 456 காட்சிகளுடன் 62.3% ஆக்கிரமிப்பு பெற்றது.

ரசிகர்கள் வரவேற்பு நிலவரம்

  • காலை காட்சிகளில் 29.85% ஆக்கிரமிப்பு இருந்த நிலையில், இரவு காட்சிகளில் 62.69% வரை உயர்ந்தது. தமிழில் 41.38% ஆக்கிரமிப்பு, தெலுங்கில் 52.35% ஆக்கிரமிப்பு பதிவாகியுள்ளது.
  • குடும்பக் கதையை மையமாகக் கொண்டதால், சூர்யாவின் கருப்பு போன்ற மாஸ்-ஆக்ஷன் படங்களைப் போல பெரும் தொடக்கத்தை பெறவில்லை.

பாக்ஸ் ஆபிஸ் தாக்கம்

சூர்யா, கருப்பு மூலம் 2026-இல் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற நிலையில், விசுவநாத் அண்ட் சன்ஸ் குடும்பக் கதையாக வந்ததால், ரசிகர்களிடையே கலவையான எதிர்வினை பெற்றுள்ளது.
விமர்சனங்கள் “உணர்ச்சி மிக்க குடும்பக் கதை” என்று பாராட்டினாலும், வசூல் அளவில் கருப்பு படத்தை முந்த முடியவில்லை.

மொத்தத்தில், விசுவநாத் அண்ட் சன்ஸ் சூர்யாவுக்கு நல்ல தொடக்கத்தை அளித்தாலும், அவரது முந்தைய மாஸ் வெற்றிகளை முந்தவில்லை. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களில் வசூல் அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதால், படத்தின் நீண்டகால வெற்றி அடுத்த சில நாட்களில் தீர்மானிக்கப்படும்.

இதையும் படிங்க; என் தாயை தந்தை அடித்தார்.. நெஞ்சில் ஆறா வடு.. பிரபல நடிகை கண்ணீர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com