Shilpa Shinde: தொலைக்காட்சி தயாரிப்பாளர் மீது போலியான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை நடிகை ஒப்புக்கொண்டுள்ளார்.
Shilpa Shinde: தொலைக்காட்சி தயாரிப்பாளர் மீது போலியான பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்ததை நடிகை ஒப்புக்கொண்டுள்ளார்.

Published on: June 4, 2026 at 2:54 pm
மும்பை, ஜூன் 4, 2026: பிரபா இந்தி தொலைக்காட்சி நடிகை ஷில்பா ஷிண்டே, பாபிஜி ஹர் பர் ஹெய்ன் மூலம் புகழ் பெற்றார். இந்தத் தொலைக்காட்சி தொடர், தொடர்பான ஒப்பந்த பிரச்சினையின் போது, தயாரிப்பாளர் சஞ்சய் கோஹ்லி மீது சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சுமத்திய பாலியல் தொல்லை குற்றச்சாட்டுகள் உண்மையற்றவை என சமீபத்தில் ஒப்புக்கொண்டார்.
போலியான பாலியல் புகார்
அந்த காலகட்டத்தில், ஒப்பந்தம் தொடர்பான கடுமையான சண்டை நிலவியதால், குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த ஒப்புக்கொள்ளலுக்குப் பிறகு, சமூக ஊடகங்களில் பலரும் அவரை கடுமையாக விமர்சித்துள்ளனர். ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள், போலியான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதால், உண்மையான பாலியல் தொல்லை சம்பவங்களின் நம்பகத்தன்மை பாதிக்கப்படுவதாகக் கூறி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஷில்பா, “பணம் கொடுத்து வேலை செய்யும் பி.ஆர் குழுவின் தவறான அணுகுமுறையால் இந்த விவகாரம் பெரிதாகி விட்டது. உலகம் என்ன சொல்கிறது எனக்கு கவலையில்லை” என்று தெரிவித்துள்ளார்.
இதன் மூலம், தன்னை குறிவைத்து திட்டமிட்ட பிரச்சாரம் நடந்ததாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த சம்பவம், திரையுலகில் போலியான குற்றச்சாட்டுகள் மற்றும் பி.ஆர் குழுக்களின் தாக்கம் குறித்து புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
இதையும் படிங்க : என் வாழ்க்கையில் மூக்கை.. திரிஷா திடீர் பதிலடி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com