Aamir Khan: சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.
Aamir Khan: சோனம் வாங்சுக் தனது உண்ணாவிரதத்தை விரைவில் முடித்துக் கொள்வார் என்று நம்புகிறேன் என நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார்.

Published on: July 17, 2026 at 1:01 pm
லண்டன், ஜூலை 17, 2026: லண்டன் இந்தியத் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்வில் ‘லகான்’ திரைப்படம் திரையிடப்பட்டபோது சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அமீர்கான், சோனம் வாங்சுக் குறித்த கேள்விக்கு தனது கருத்துகளை பகிர்ந்தார். ‘3 இடியட்ஸ்’ திரைப்படத்தில் அவர் நடித்த ‘ரான்சோ’ கதாபாத்திரம் சோனம் வாங்சுக்கை அடிப்படையாகக் கொண்டது என்ற நீண்ட கால நம்பிக்கையை அவர் மறுத்து, அது உண்மையல்ல என்று தெளிவுபடுத்தினார்.
#india Aamir Khan Denies Sonam Wangchuk Link to '3 Idiots' Amid Activist's Fast #cjp_पार्टी
— Thepagetoday (@thepagetody) July 17, 2026
In a recent London Indian Film Festival conversation, Aamir Khan dismissed claims that Ladakhi engineer and activist Sonam Wangchuk inspired his iconic Rancho character in the 2009…
அமீர், “அந்த காலத்தில் திரு. சோனம் அவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. ராஜ்குமார் ஹிரானி அல்லது அபிஜாத் ஜோஷி ஆகிய எழுத்தாளர்களுக்கும் அவரைப் பற்றி தெரியாது. எனவே ‘ரான்சோ’ கதாபாத்திரம் அவரை அடிப்படையாகக் கொண்டது என்பது தவறான புரிதல்,” என்று விளக்கினார்.
அதே நேரத்தில், சோனம் வாங்சுக் தற்போது மேற்கொண்டு வரும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் குறித்து அமீர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். “அவர் விரைவில் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்வார் என்று நம்புகிறேன்,” என்று கூறிய அவர், சோனம் செய்துவரும் பணிகள் மிகச் சிறந்தவை என்றும், அவற்றை மதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
அமீர்கானின் இந்த கருத்துகள், சோனம் வாங்சுக்கின் போராட்டத்திற்கு ஆதரவாகவும், அவரது உடல்நிலை குறித்த அக்கறையாகவும் பார்க்கப்படுகின்றன. ரசிகர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அமீரின் வெளிப்பாட்டை பாராட்டி வருகின்றனர்.
இதையும் படிங்க : இளம் இயக்குனர்களின் புதிய முயற்சி.. அன்பே டயனா.. நேரில் பாராட்டிய சிவ கார்த்திகேயன்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com