Actress Samantha | நடிகை சமந்தாவுக்கு புதிய நோய் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
Actress Samantha | நடிகை சமந்தாவுக்கு புதிய நோய் ஒன்று இருப்பதாக தெரியவந்துள்ளது.
Published on: October 21, 2024 at 8:45 pm
Actress Samantha | நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தான் புதிய நோயால் அவதிப்படுவதாக தெரிவித்துள்ளார். நடிகை சமந்தா, தற்போது ‘சிட்டாடல்: ஹனி பன்னி’ என்ற வெப் தொடரில் நடித்து முடித்துள்ளார. இந்த தொடர் அடுத்த மாதம் 7-ந் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பேட்டியளித்த அவர், இந்த தொடரில் நடிக்கும் போது தனக்கு மயோசிடிஸ் இருப்பது தெரியவந்ததாகவும், இது மட்டுமில்லாமல் ஞாபக மறதியும் ஏற்பட்டு அவதிப்பட்டதாக தெரிவித்துளளார்.
மேலும். சிலரின் பெயரை கூட நியாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. யாரும் என்னை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவில்லை, படப்பிடிப்பில் கூட யாரும் என்னிடம் நலன் விசாரிக்கவில்லை. இந்த நோய் ஏற்பட்டது முதல், இன்று வரை எல்லா டிரீட்மென்ட்டுக்கும் நானே தனியாகவே போய் வருகிறேன். மயோசிடிஸ் இருந்தால், குழப்பம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல் இருக்கும் என்றார்கள், அவற்றுடன் தினமும் தனிமையில் அவதிப்பட்டு வருகிறேன்.
இந்த தொடரில் பல ஆக்சன் காட்சிகள் இருந்ததால், என்னால் அதை செய்ய முடியுமா என்ற சந்தேகத்தில் இயக்குனர் ராஜ் மற்றும் டிகே ஆகியோரிடம் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறினேன். எனக்கு பதிலாக வேறு ஒரு நடிகைகளையும் பரிந்துரைத்தேன். ஆனால், அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. என் மீது மட்டுமே அவர்கள் உறுதியாக இருந்ததால், மிகவும் சிரமப்பட்டு ஆக்ஷன் காட்சிகளில் நடித்தேன் என்று கூறினார்.
இந்த பேட்டியைப் பார்த்த அவரது ரசிகர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் விரைவில் குணமாக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க ரெட் கலர் ; டிரெடிஷனல் லுக் ; ரசிகர்களை கவர்ந்த ராசி கன்னா
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com