Chennai | யூ-ட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Chennai | யூ-ட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
Published on: October 21, 2024 at 7:25 pm
Chennai | யூ-ட்யூபர் இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். யூடியூபர் இர்ஃபானுக்கு ஜூலை மாதம் 24ஆம் தேதி, சென்னையில் உள்ள ரெயின்போ தனியார் மருத்துவமனையில் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தை பிறக்கும்போது அறுவை சிகிச்சை அறையில் மனைவியின் தொப்புள் கொடியை இர்ஃபான் அகற்றியுள்ளார்.
இதற்கு அங்கிருந்த மருத்துவர்கள் அனுமதி அளித்துள்ளனர். இந்நிலையில், இது தொடர்பான வீடியோவை இர்ஃபான் யூ-ட்யூபர் சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருந்தார். இது தமிழ்நாடு மருத்துவச் சட்டத்தின்படி இது தவறு என மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் தான் இந்த அறுவை சிகிச்சையை செய்ய வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இது பெரும் சர்ச்சையாக வெடித்த நிலையில், இர்ஃபான் மீது சோழிங்கநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், மருத்துவ அதிகாரிகள் சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் சோதனை நடத்தினார்கள். ஏற்கனவே இர்ஃபான் தனது குழந்தையின் பாலினத்தை வெளியிட்டது தொடர்பாக சர்ச்சையில் சிக்கினார். இதையடுத்து அவர் மன்னிப்பு கேட்ட நிலையில், அவர் நடவடிக்கையில் இருந்து தப்பினார்.
அப்போது இது பெரும் சர்ச்சையானது. இர்ஃபான் ஆளுங்கட்சி பிரமுகர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவர் நடவடிக்கையில் இருந்து தப்ப வைக்கப்பட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், இர்ஃபான் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க சென்னையில் தாறுமாறாக ஓடிய கார்; 6 பேர் பலத்த காயம்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com