பாக்ஸ் ஆபிஸில் சிதறும் சல்மான் கானின் சிக்கந்தர் .. 4-ம் நாள் வசூல் நிலவரம்!

Sikandar box office collection: சல்மான் கானின் சிக்கந்தர் படம் பாக்ஸ்ஆபிஸில் ₹84 கோடி வசூலித்துள்ளது. எனினும், ஷாருக்கானின் டன்கியை முறியடிக்க முடியவில்லை.

Published on: April 3, 2025 at 1:28 pm

Updated on: April 3, 2025 at 2:51 pm

சல்மான் கான் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள சிக்கந்தர் திரைப்படம், இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் ஒன்றாகும். எனினும், இத்திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது. Sacnilk.com இன் சமீபத்திய புதுப்பிப்பின்படி இந்தத் திரைப்படம் ₹84 கோடி வசூலித்துள்ளது. இந்நிலையில், பாக்ஸ் ஆபிஸ் அறிக்கையின்படி, சிக்கந்தர் வெளியான நான்காவது நாளில் ₹9.75 கோடி வசூலித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இதுவரை இந்தப் படத்திற்கான ஒரே நாளில் இதுவே மிகக் குறைந்த வசூல் ஆகும் என்ற தகவலும வெளியாகி உள்ளது. புனித ரமலான் தினத்தில் வெளியான இந்தப்ப படம் முதல் நாளில் ₹26 கோடி வசூலித்தது. இந்த நிலையில், இரண்டாவது நாளில் ₹29 கோடியுடன் சிறிய வளர்ச்சி கண்டது. வெளியான மூன்றாவது நாளில் ₹19.5 கோடியுடன் சரிவு தொடங்கியது. நான்காவது நாள் வசூலை கணக்கில் எடுத்துக்கொண்டால், சிக்கந்தர் 50% சரிவைக் கண்டுள்ளது.

கஜினி உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ள ஏ.ஆர் முருகதாஸ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்தில் சத்யராஜ் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்களும் நடித்துள்ளனர். இந்தப் படம் வசூலில் ஷாருக்கானின் டன்கியை முறியடிக்க முடியவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது.

இதையும் படிங்க சரிவை சந்தித்த சல்மான் கான்? சிக்கந்தர் முதல் நாள் வசூல் என்ன?

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com