வக்ஃப் என்ற வார்த்தை எங்கிருந்து வந்தது? இதன் பொருள் என்ன?

Meaning of waqf: 2024 வக்ஃப் திருத்த மசோதா இன்று (ஏப் 3 2025) மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் ஆதரவு அளித்துள்ளனர்.

Published on: April 3, 2025 at 2:18 pm

Updated on: April 3, 2025 at 2:52 pm

புதுடெல்லி, ஏப் 3 2025: வக்ஃப் (திருத்த) மசோதா 2025, 12 மணி நேர விவாதத்திற்குப் பிறகு வியாழக்கிழமை (ஏப்.3 2025) நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதாவுக்கு 288 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 232 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி இந்த சட்டம் சிறுபான்மையினருக்கு நன்மை பயக்கும் என்று ஆதரித்தது. மறுபுறம், எதிர்க்கட்சிகள் அதனை “இஸ்லாமிய விரோதம்” என்று எதிர்த்து வாக்களித்தன. முன்னதாக, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கொண்டு வந்த அனைத்து திருத்தங்களும் குரல் வாக்குகளால் நிராகரிக்கப்பட்ட பின்னர் மசோதா நிறைவேற்றப்பட்டது.

வக்ஃப் வரலாறு

“வக்ஃப்” என்ற வார்த்தை அரபு வார்த்தையான “வக்ஃபா”விலிருந்து பிறந்தது ஆகும். இதன் பொருள் தடுத்து வைத்தல், வைத்திருத்தல் அல்லது கட்டி வைத்தல் என பொருள்படுவது ஆகும். எனினும், இஸ்லாமிய சட்டத்தில் வக்ஃப் என்பது ஒரு தனிநபர் மத அல்லது மனிதநேய நோக்கங்களுக்காக சொத்தை அர்ப்பணிக்கும் ஒரு தொண்டு நிறுவனத்தைக் குறிக்கிறது. இந்த வக்ஃப் சொத்தை பரம்பரை மூலம் மாற்றவோ, விற்கவோ அல்லது கொடுக்கவோ முடியாது.

வக்ஃப் நிறுவனர் யார்?

ஒருவர், எழுத்துப்பூர்வ அறிவிப்பின் மூலமாகவோ அல்லது சொத்தை அர்ப்பணிக்கும் நோக்கத்தை வாய்மொழியாக வெளிப்படுத்துவதன் மூலமாகவோ வக்ஃப் உடன் இணைகிறார். மவ்கூஃப் ‘அலைஹ்’ என்று குறிப்பிடப்படும் பயனாளிகள், வக்ஃபிலிருந்து பயனடைபவர்கள். இதனை நிர்வகிக்கும் பொறுப்பு முதவல்லி அல்லது அறங்காவலருக்கு வழங்கப்படும்.

இந்தியாவில் வஃக்ப் சட்டம் தோற்றம்

இந்தியாவில் வக்ஃப் சட்டத்தின் தோற்றம் காலனித்துவத்திற்கு முந்தைய காலத்திலிருந்தே காணப்படுகிறது, அங்கு இஸ்லாமிய ஆட்சியாளர்களும் பிரபுக்களும் மத நோக்கங்களுக்காக அடிக்கடி சொத்துக்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர். முன்னதாக, ஆங்கிலயே காலனித்துவத்திற்கு முந்தைய இந்தியாவில், இந்துக்களும் முஸ்லிம்களும் குடும்ப விவகாரங்களில் தங்கள் தனிப்பட்ட சட்டங்களைப் பின்பற்றினர்.

வக்ஃப் சொத்துக்கள் வளர்ச்சி

1954 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் வக்ஃப் சொத்துக்களின் பதிவு மேலாண்மை மற்றும் மேற்பார்வைக்கான விரிவான கட்டமைப்பை வழங்க வக்ஃப் சட்டம் இயற்றப்பட்டது. இந்தச் சட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டு, 1955 ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இது தற்போதைய நிர்வாகச் சட்டமாகும். 2013 ஆம் ஆண்டு திருத்தங்கள் வக்ஃப் சொத்துக்களின் சட்டவிரோத அந்நியப்படுத்தலைத் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தின.

அதே வேளையில் வக்ஃப் வாரியத்தின் அதிகாரத்தை மேலும் வலுப்படுத்தின. இதற்கிடையில், வக்ஃப் சொத்துக்களை வரையறுத்தல், மாநில வக்ஃப் வாரியங்களை உருவாக்குதல் மற்றும் மத்திய வக்ஃப் கவுன்சிலை நிறுவுதல் தொடர்பான பல முக்கிய விதிகளை 1955 சட்டம் கோடிட்டுக் காட்டுகிறது. வக்ஃப் சொத்துக்களை அடையாளம் கண்டு வரையறுப்பதற்கு ஒவ்வொரு மாநிலமும் ஒரு சர்வே கமிஷனரை நியமிக்க வேண்டும் என்று சட்டம் சுட்டிக் காட்டுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : நாட்டில் அனைவரும் பார்க்க வேண்டிய படம்.. எம்புரான் படத்தை புகழ்ந்த அமைச்சர்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com