Disha Patanis | பாலிவுட்டில் இன்று பிரபலமான நட்சத்திரமாக வலம்வரும் திஷா பதானி, லோஃபர் என்ற தெலுங்கு படத்தின் மூலமாக 2015ல் சினிமாவில் அறிமுகமானார்.
திஷா பதானிக்கு பாலிவுட்டில் அறிமுக படமாக எம்.எஸ் தோனி தி அன்டோல்டு ஸ்டோரி படம் அமைந்தது. இதுவே இவருக்கு பாலிவுட் அறிமுக படமும் ஆகும்.
உத்தரப் பிரதேச மாநிலம் பெரேலி பகுதியை சேர்ந்த திஷா, இந்து ராஜ்புத் குடும்ப பின்னணியை கொண்டவர் ஆவார்.
நடிகை திஷா பதானியின் மூத்த சகோதரி, குஷ்பூ பதானி இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் ஆவார். அவருக்கு சூரியன்ஷ் பதானி என்ற இளைய சகோதரரும் உள்ளார்.
டைம்ஸின் 50 மிகவும் விரும்பத்தக்க பெண்கள் பட்டியலில் பதானி பல்வேறு முறை இடம்பெற்றுள்ளார். 2017ல் 19வது இடத்தையும், 2018ல் 9வது இடத்தையும் பிடித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
Deepika Padukone to leave Kalki: கல்கி 2898 AD படத்தின் அடுத்த பாகத்தில் நடிகை தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என படத்தின் தயாரிப்பாளர்கள் அதிகாரப்பூர்வமாக…
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.