2 ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீஸ் இல்லை; ஆனாலும் ஸ்டார் பட்டியலில் அஜித்!

இரண்டு ஆண்டுகளாக ஒரு படம் கூட ரிலீஸ் ஆகாத நிலையிலும், ஸ்டார் ஹீரோக்கள் பட்டியலில் நடிகர் அஜித்குமார் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

Published on: November 27, 2024 at 9:54 am

Ajith Kumar in Stars List | தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித்குமார், தற்போது கார் ரேஸ் உள்ளிட்ட பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் நடிப்பில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துணிவு என்ற படம் வெளியாகி இருந்தது.

அதன் பின்னர் இவர் நடிப்பை விட்டு விட்டு கார் ரேஸ் பைக் ரேஸ் என கவனம் செலுத்த ஆரம்பித்தார். இதற்கிடையில் விடா முயற்சி என்ற படத்தில் நடித்திருந்தார். அந்தப் படத்தின் வெளியீடு குறித்து தற்போது வரை எந்த தகவலும் இல்லை.

இந்த நிலையில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்திலும் நடிகர் அஜித்குமார் நடித்துள்ளார். இந்தப் படம் 2025 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம், விடாமுயற்சி ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வெளியாகலாம் எனவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் ஸ்டார் நடிகர்களின் பட்டியல் ஒன்று தற்போது வெளியாகி உள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பிரபாஸ் உள்ளார். இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்கள் முறையே நடிகர் விஜய் மற்றும் ஷாருக்கான் உள்ளனர். நான்காம் இடத்தில் ஜூனியர் என்டிஆர் உள்ளார். ஐந்தாம் இடத்தில் நடிகர் அஜித்குமார் உள்ளார்.

மற்ற இடங்களில் நடிகர் அல்லு அர்ஜுன், மகேஷ் பாபு, சூர்யா, ராம்சரண் மற்றும் சல்மான் கான் ஆகியோர் உள்ளனர். இரண்டாம் இடத்தில் உள்ள நடிகர் விஜய் கடந்த ஆண்டு முதல் இடத்தில் இருந்தார். கல்கி திரைப்படம் வெளியான பின்பு நடிகர் பிரபாஸின் பிரபலம் மேலும் அதிகரித்துள்ளது. தற்போதைய நிலையில் அவர் தான் இந்தியா நடிகராக உள்ளார். இவரின் கைவசம் தற்போது சலார் 2 உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க சிவகார்திகேயனுக்கு வில்லனாகும் ஜெயம் ரவி !

மக்களின் மனதை டச் செய்த படம் சூர்ய வம்சம்; இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கல.. சரத் குமார் Actor Sarath Kumar opens up about the success of Suryavamsam

மக்களின் மனதை டச் செய்த படம் சூர்ய வம்சம்; இவ்வளவு பெரிய வெற்றியை எதிர்பார்க்கல.. சரத் குமார்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com