அழகாய் இருக்கிறது ஒரு குத்தமாயா..? விஜய் பட நடிகைக்கே இந்த நிலைமையா?

Actress Pooja Hegde: நடிகை பூஜா ஹெக்டே தமிழ் படம் ஒன்றில் தான் நிராகரிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இவர் நடிகர் விஜயுடன் பீஸ்ட் என்ற படத்தில் நடித்திருந்தார்.

Published on: April 6, 2025 at 1:33 pm

இயக்குனர் மிஷ்கினின் முகமூடி என்ற படத்தில் தமிழில் அறிமுகமாகி தற்போது வெற்றி நடிகையாக தொடர்ந்து வருபவர் நடிகை பூஜா ஹெக்டே. ஜீவா உடன் அறிமுகமாகி தற்போது தெலுங்கு ஹிந்தி என பிசியாக நடித்து வருகிறார். சினிமாவில் இவர் அறிமுகமாகி 10 ஆண்டுகளுக்கு மேல் கடந்து விட்டது.

எனினும் அறிமுகத்தின் போது, எப்படி இருந்தாரோ அதுபோலவே தற்போது வரை காணப்படுகிறார். இந்த நிலையில் சமீபத்தில் தமிழ் பட ஒன்றின் ஆடிஷனில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அந்தப் படத்தில் இருந்து நடிகை பூஜா, நிராகரிக்கப்பட்டுள்ளார். பூஜா இளமை ததும்ப காணப்படுவதால் படத்திலிருந்து நிராகரிக்கப்பட்டதாகவும் அந்தப் படத்திற்கு சற்று முதுமையான கதாபாத்திரம் தேவைப்பட்டதாகவும் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

இது தொடர்பாக பேசிய நடிகை பூஜா, ” நான் தற்போது வரை படங்களில் ஆடிசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன். இதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. பொதுவாக ஆடிசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும்போது என்னால் அனைத்து விதமான கதாபாத்திரங்களிலும், பொருத்தமாக நடிக்க முடியும் என்ற நம்பிக்கை வருகிறது.

இந்த ஆடிசன் பலருக்கும் கிடைப்பதில்லை; ஆகவே வாய்ப்பு கிடைக்கும் போது நான் இதனை பயன்படுத்திக் கொள்கிறேன். மேற்கத்திய நாடுகளில் உள்ள சினிமா கலைஞர்கள் பெரியவர்கள் கூட ஆடிசன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்கள்” என்றார்.

முகமூடி என்ற தமிழ் படத்தில் அறிமுகமான நடிகை பூஜா சல்மான் கான் மற்றும் விஜய், பிரபாஸ் என முன்னணி கதாநாயகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். தற்போது இவர் சூர்யாவின் ரெட்ரோ என்ற திரைப்படத்திலும் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் என்ற படத்திலும் நடித்து வருகிறார். இது தவிர பாலிவுட் சினிமா ஒன்றிலும் நடிகை பூஜா நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:  யார் இந்த சுருதி நாராயணன்?வீடியோ சர்ச்சையில் சிக்கிய தமிழ் நடிகை!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com