Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி 0.15 சதவீதம் ஆக சரிந்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Anbumani Ramadoss: தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி 0.15 சதவீதம் ஆக சரிந்துள்ளது என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Published on: April 6, 2025 at 1:51 pm
சென்னை, ஏப்.6 2025: பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ்நாட்டில் வேளாண் வளர்ச்சி சரிந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டின் பொருளாதாரம் 2024-25ஆம் ஆண்டில் 9.69%
வளர்ச்சியடைந்திருக்கிறது. இது மகிழ்ச்சியும், மன நிறைவும் அளிக்கக்கூடியது தான் என்றாலும், வேளாண் துறையின் வளர்ச்சி வெறும் 0.15% ஆக குறைந்திருப்பது மிகவும் கவலையளிக்கிறது.
அடிப்படையில் வேளாண்மையை சார்ந்த மாநிலமான தமிழ்நாடு, விவசாயிகள் முன்னேறாமல் முன்னேற முடியாது என்ற உண்மையை அறிந்திருந்தும் வேளாண் வளர்ச்சிக்காக முன்னோக்கு நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு இதுவரை எடுக்காதது வருத்தம் அளிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அன்புமணி ராமதாஸ், ”2024-25ஆம் ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த பொருளாதாரம் 9.69% அதிகரித்திருக்கும் நிலையில், அதைவிட அதிகமாக சேவைத்துறை 12.7 விழுக்காடும், உற்பத்தித்துறை 9 விழுக்காடும் வளர்ச்சி அடைந்துள்ளன.
ஆனால், தமிழ்நாட்டின் பெரும்பான்மை மக்களின் வாழ்வாதாரமாக திகழக் கூடிய முதன்மைத் துறையான வேளாண் துறையோ, சேவைத்துறையின் வளர்ச்சியில் கிட்டத்தட்ட நூறில் ஒரு பங்கை மட்டுமே எட்டியிருக்கிறது” எனவும் கூறியுள்ளார்.
இதையடுத்து, ”நெல்லுக்கான கொள்முதல் விதையை குண்டாலுக்கு ரூ.3,500ஆக உயர்த்த வேண்டும்; கரும்புக்கான கொள்முதல் விலையை டன்னுக்கு 5 ஆயிரம் ரூபாயாக உயர்த்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், இதில் 60 விழுக்காடு அளவுக்கு மட்டும் தான் கொள்முதல் விலை வழங்கப்படுகிறது.
உழவர்களின் சுமையைப் போக்க ஆண்டுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் இடுபொருள் மானியம் வழங்கப்படவேண்டும் என்று பாமக வலியுறுத்தி வருகிறது. அந்தக் கோரிக்கையும் இன்றுவரை ஏற்கப்படவில்லை. இந்தப் போக்கு வேளாண்துறை வளர்ச்சிக்கு எந்த வகையிலும் உதவாது” எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், வேளாண்துறை வளர்ச்சியை முதன்மை நோக்கமாகக் கொண்டு அதற்கான சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும். அதற்காக அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் நியாயமான கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட வேண்டும். உழவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் இடுபொருள் மானியம் வழங்கப்பட வேண்டும்.
இவை அனைத்திற்கும் மேலாக, வேளாண் விளைபொருட்களை மதிப்புக்கூட்டி ஏற்றுமதி செய்தல், குளிர்ப்பதனக் கிடங்குகள் அமைத்தல் போன்றவற்றுக்காக அதிக அளவில் முதலீடுகள் செய்யப்படவேண்டும். அதன் மூலம் வேளாண் துறை வளர்ச்சியையும், உழவர்களின் வருவாயையும் அரசு அதிகரிக்க வேண்டும்” எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதையும் படிங்க : சென்னை வருகிறார் அமித்ஷா.. தமிழக பாஜக தலைவர்களுடன் சந்திப்பு?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com