Actress Malavika Mohanan: கேமராவுக்கு பின்னால் நடிகர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் ஓப்பனாக பேசியுள்ளார்.
Actress Malavika Mohanan: கேமராவுக்கு பின்னால் நடிகர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பது குறித்து நடிகை மாளவிகா மோகனன் ஓப்பனாக பேசியுள்ளார்.
Published on: April 26, 2025 at 1:10 pm
Updated on: April 26, 2025 at 12:38 pm
சென்னை ஏப்ரல் 26 2025: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை அந்தஸ்தில் உயர்ந்தவர் நடிகை மாளவிகா மோகனன். கேரளத்தை பூர்வீகமாக கொண்ட இவர் தமிழ், தெலுங்கு என சினிமா வட்டாரத்தில் ஒரு ரவுண்டு வருகிறார். தற்போது பாகுபலி நடிகர் பிரபாஸுடன் இணைந்து, ‘தி ராஜா ஷாப்’ என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.
இந்தப் படம் தவிர மோகன்லாலின், ‘இருதயபூர்வம்’ என்ற மலையாளத் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் காணப்படும் ஆண் பெண் வேறுபாடு குறித்து நடிகை மாளவிகா மோகனன் ஓப்பனாக மனம் திறந்து பேசி உள்ளார்.
இது தொடர்பாக பேசிய நடிகை மாளவிகா மோகனன், ” சினிமாவில் நான் கடந்த ஐந்து ஆண்டுகளாக முகமூடி அணிந்துள்ள பல நடிகர்களை பார்த்து உள்ளேன். அவர்கள் எல்லோரும் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொள்கிறார்கள்.
அதன்படி எந்தெந்த நேரத்தில் எந்தெந்த இடத்தில் பெண்களை புகழ்ந்து பேச வேண்டுமோ அங்கெல்லாம் அவர்கள் புகழ்ந்து பேசுவார்கள். ஆனால் திரைக்குப் பின்னால் அவர்கள் எப்படி எல்லாம் மாறுவார்கள் என்பது எனக்கு தெரியும்” என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, “ஏன் இந்த பாசாங்குத்தனம்” எனவும் நடிகை மாளவிகா மோகனன் கேள்வி எழுப்பி உள்ளார். தொடர்ந்து, “சினிமாவில் ஆண் பெண் என்ற வேறுபாடு வேரூன்றி காணப்படுகிறது” என கூறிய நடிகை மாளவிகா மோகனன், ‘இது எப்போது முடிவுக்கு வரும்’ என்றும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: பொன்னியின் செல்வன், “வீர ராஜா வீர பாடல்”: பதிப்புரிமை வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com