அம்மா, அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள்.. விஜய்யின் வீடியோ வைரல்!

Actor vijay: அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்யுங்கள் என நடிகர் விஜய் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.

Published on: March 7, 2026 at 10:28 am

சென்னை மார்ச் 7 2026; நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கி நடத்தி வருகிறார்; இந்தக் கட்சி 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த நிலையில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு பிரச்சனைகள் வந்த வண்ணம் உள்ளன; கரூர் துயரத்தில் இருந்து மீண்டு வந்து மீண்டும் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபடும் விஜய் தற்போது, தனிப்பட்ட குடும்ப பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கிறார்.

அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளார்; அந்த மனதில் நடிகர் விஜய் சக நடிகை ஒருவருடன் தொடர்பில் இருப்பதாகவும், இதனால் தானும் தனது குழந்தைகளும் மனம் மற்றும் உடல் ரீதியாக பல்வேறு பிரச்சனைகளை அனுபவித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் தாம் இந்த உறவு குறித்து அறிந்ததும் இதை கண்டித்து கைவிடும் படி கூறிய நிலையில் அதை கைவிடாமல் ஈவு இரக்கமின்றி தொடர்கிறார் எனவும் அந்த விவாகரத்து மனுவில் சங்கீதா தெரிவித்துள்ளார்.

இது சினிமா மட்டுமின்றி, தமிழக அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது; பொதுவாக அரசியல் கூட்டங்களில் ஆளும் கட்சியான திமுகவை நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் கடுமையாக விமர்சித்து வருகிறார்; இந்த நிலையில் நடிகர் விஜய் சங்கீதா விவாகரத்து மனுவை யார் திருப்பி விட்டார் என்பது மக்களுக்குத் தெரியும் என தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பேசி வருகிறார்கள்.

இதையும் படிங்க கற்பனை கலந்த வித்தியாசமான காதல் கதை.. சின்ன வயது ஆதித்ய கரிகாலனா இது?

இது ஒருபுறம் அரசியல் ரீதியாக பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் நடிகர் விஜய் பேசிய பழைய காணொளி ஒன்று தற்போது வைரல் ஆகி வருகிறது. அந்தக் காணொளியில் பேசும் விஜய், ” அம்மா அப்பா பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ளுங்கள்; நானும் அப்படித்தான் திருமணம் செய்து கொண்டேன். என் வாழ்க்கை நன்றாக இருக்கிறது” என அவரது ரசிகர்களுக்கு அவர் அறிவுரை கூறுகிறார். இந்த வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றன.

மருமகள் அல்ல மகள்

முன்னதாக நடிகர் விஜய்யின் தாயார் சோபா பேசிய வீடியோ ஒன்றும் வைரலானது; அதில் அவர் தனது மருமகளும் நடிகர் விஜய்யின் மனைவிமான சங்கீதா குறித்து பேசுகிறார்.
அப்போது குழந்தைகள் மற்றும் வீடுகளை பார்ப்பதில் சங்கீதா மருமகள் அல்ல மகள் எனக் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க நடிகராக புகழ் பெறலாம்.. ஆனால், தனிவாழ்வில்.. கோவிந்தா பரபரப்பு பேச்சு!

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா மோத்வானி
Hansika Motwani

தவறான ரயிலில் ஏறிவிட்டால் துன்பப்படுவதை விட இறங்குவது மேலானது.. விவாகரத்து குறித்து ஹன்சிகா

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com