மேற்காசியாவில் பதற்றம் அதிகரிப்பு.. இந்திய பங்குச் சந்தைகள் தடுமாற்றம்!

Sensex sinks 600 points : மேற்கு ஆசியாவில் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், இந்தியப் பங்குச் சந்தையில் சரிவில் வர்த்தகத்தை தொடங்கின.

Published on: July 13, 2026 at 11:25 am

மும்பை, ஜூலை 13, 2026: மேற்கு ஆசியாவில் அமெரிக்கா–ஈரான் பதற்றம் மீண்டும் அதிகரித்ததால் இந்திய பங்குச் சந்தை இன்று (ஜூலை 13, 2026) காலை கடுமையாக வீழ்ச்சி கண்டது. சென்செக்ஸ் 600 புள்ளிகளுக்கும் மேல் சரிந்து 76,931 புள்ளிகளாகவும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்கு கீழ் தாழ்ந்தும் காணப்பட்டது. பிரென்ட் கச்சா எண்ணெய் விலை $79-ஐ நெருங்கியதால் முதலீட்டாளர்கள் எச்சரிக்கையுடன் செயல்பட்டனர்.

இதற்கிடையில், கச்சா எண்ணெய் பிரென்ட் விலை 4% உயர்ந்து ஒரு பீப்பாய் $79.21 ஆக காணப்படுகிறது. இந்த நிலையில் மற்ற ஆசிய ஆசிய சந்தைகளான ஜப்பான் நிக்கெய் 1.44% வீழ்ச்சியும், தென் கொரியா கோஸ்பி 3.58% சரிவும் கண்டுள்ளது.

மற்ற பங்குகள்

மற்ற பங்குகளை பொறுத்தமட்டில் வங்கி, ஆட்டோ, உலோகம் பங்குகள் அதிக அழுத்தத்தில் இருந்தன. எனினும், தகவல் தொழில்நுட்பம் (ஐ.டி) துறை மட்டும் எதிர்மறை போக்குக்கு மாறாகச் செயல்பட்டது. ஹெச்.சி.எல் டெக் தனது முதல் காலாண்டு முடிவுகளை வெளியிடவுள்ளதால், முதலீட்டாளர்கள் தகவல் தொழில்நுட்ப பங்குகளில் ஆர்வம் காட்டினார்கள்.

உலகளாவிய சமிக்ஞைகள்

அமெரிக்கா–ஈரான் மோதல் காரணமாக ஹோர்முஸ் கடல்சந்தி மூடப்பட்டதாக ஈரான் அறிவித்தது; அமெரிக்கா திறந்திருப்பதாக தெரிவித்தது. இதனால் எரிசக்தி விநியோகத்தில் இடையூறு ஏற்படும் என்ற அச்சம் அதிகரித்தது.
இதற்கிடையில், அமெரிக்க பங்குச் சந்தை கடந்த வாரம் உயர்வுடன் முடிந்தாலும், இன்று ஆசிய சந்தைகளில் பதற்றம் காரணமாக வீழ்ச்சி கண்டது.

இந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை $79-ஐ நெருங்கியதால் இந்தியாவின் இறக்குமதி செலவுகள் மற்றும் பணவீக்கம் மீதான அழுத்தம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க :வெளிநாட்டு வங்கிகள் மூலம் குறைந்த வட்டியில் கடன்.. ஸ்ரீராம் பைனான்ஸ் முயற்சி!

சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் எவை? நிதி ஆயோக் முன்னாள் தலைவர் பரபரப்பு பேச்சு! Ex-NITI Aayog Chief on Mining Challenges

சுரங்க தொழில்களின் வளர்ச்சியை தடுக்கும் முக்கிய காரணிகள் எவை? நிதி ஆயோக் முன்னாள்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com