இந்தியாவில் பண பரிவர்த்தனை திடீர் அதிகரிப்பு.. என்ன காரணம்?

India’s Cash Transactions Rise: இந்தியாவில் பணப் பரிவர்த்தனை இன்னும் 12.5% அளவுக்கு அதிகரித்துள்ளது.

Published on: September 29, 2026 at 5:26 pm

புதுடெல்லி, செப்டம்பர் 29, 2026; இந்தியாவில் UPI பரவலாக வளர்ந்தாலும், பணப் பரிவர்த்தனை இன்னும் 12.5% அளவுக்கு அதிகரித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இதை “Cash Paradox” என அழைக்கிறது — டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தாலும், பொருளாதார வளர்ச்சி, கிராமப்புற தேவைகள் மற்றும் பணத்தின் மீது உள்ள நம்பிக்கை காரணமாக பணத்தின் தேவை குறையவில்லை.

UPI 2025-26 நிதியாண்டில் 24,000 கோடி பரிவர்த்தனைகளை ₹314 லட்சம் கோடி மதிப்பில் செயல்படுத்தியுள்ளது. க்யூ.ஆர் கோடு, மொபைல் செயலிகள் மூலம் சிறிய தேநீர் கடை முதல் பெரிய சில்லரை விற்பனை கடை வரை அனைவரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை ஏற்கின்றனர். இதனால், தினந்தோறும் அடிப்படையில் பணப்பரிவர்த்தனை குறைந்தாலும், பணத்தின் தேவை என்ற விகிதத்தில் குறையவில்லை.

அதன்படி ஜூலை 31, 2026 நிலவரப்படி 12.5% அதிகரித்துள்ளது. இதுகுறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் துணை கவர்னர் சிரிஸ் சந்திர முர்மு கூறுகையில், “ பண பரிவர்த்தனை குறைந்தாலும், கரன்சிகளின் தேவை அதிகரித்து காணப்படுகிறது. பணப்பரிவர்த்தனை தேவை (GDP வளர்ச்சி பணவீக்கம், மற்றும் வட்டி விகிதம், (பழைய நோட்டுகள் மாற்றம்) ஆகியவை நேரடி பணத்தின் தேவையை உயர்த்துகின்றன.

நகர்ப்புறங்களில், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் கிராமப்புறம், பகுதியளவு நகர்புற கிராமப் பகுதிகள், சிறிய வியாபாரிகள், மூத்தவர்கள் பணத்தை இன்னும் அதிகம் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் 2,50,000 ATMs, micro-ATMs, ஆதார் அமைப்பு மூலமாக பணம் எடுத்தல் மூலம் பண பரிவர்த்தனை அதிகமாகவே உள்ளன.

மொத்தத்தில், UPI பரிவர்த்தனை தீர்வை ஏற்படுத்தியுள்ளதாலும், பண தாள்களின் தேவை இன்னும் வலுவாக உள்ளது. டிஜிட்டல் பேமெண்ட்கள் மற்றும் பண பொருளாதாரம் இரண்டும் ஒரே நேரத்தில் வளர்கின்றன. ஆர்பிஐ பணத்தாள்கள் விடுவிப்பு, காலக்கெடு மற்றும் கார்பன் ஃபுட்பிரிண்ட் குறைப்பில் கவனம் செலுத்தி வருகிறது. பணம் , இந்தியாவில் இன்னும் முக்கியமான பரிவர்த்தனை வழியாகவே ஆகவே உள்ளது.

இதையும் படிங்க; 4 சதவீதம் வரை தங்கம், வெள்ளி விலை சரிவு.. முதலீடு செய்ய உகந்த நேரமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com