சரசரவென சரிந்த தங்கம்.. இன்றைய நிலவரம் தெரியுமா?

Gold Rate today in Chennai : சென்னையில் தங்கம் விலை இன்று கிராமுக்கு ரூ. 50 குறைந்துள்ளது.

Published on: February 28, 2025 at 9:47 am

Updated on: February 28, 2025 at 10:24 am

இன்றைய தங்கம் விலை (28-02-2025): தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து நகைப்பெறியர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது கிராம் தங்கம் 8,000-த்தை கடந்தும் சவரன் ரூ. 64 ஆயிரத்தை கடந்தும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கம் விலையில் தினமும் ஏற்ற இறக்கம் ஏற்பட்டு மாற்றங்களுடன் காணப்படும் நிலையில் இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் குறித்து இப்போது பார்க்கலாம்.

தங்கம் விலை

தங்கம் விலை நேற்று கிராம் ரூ.8,010 ஆகவும் சவரன் ரூ. 64 ஆயிரத்து 80 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த இரு தினங்களான தங்கம் விலை குறைந்துள்ள நிலையில் இன்றும் தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து சவரனுக்கு ரூ.400 குறைந்துள்ளது. இதனால் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.7,960 ஆகவும் சவரன் ரூ.63,680 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

24 கேரட் தூய தங்கத்தை பொருத்தவரை கிராம் ரூ.8,683 ஆகவும் சவரன் ரூ. 69,464 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வெள்ளி விலை

வெள்ளி விலை கடந்த இரு தினங்களாக கிராம் ரூபாய் 106 ஆகவும் கிலோ வெள்ளி ரூ. 106,000ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று ரூ. 1 குறைந்து கிராம் வெள்ளி ரூ. 105 ஆகவும் கிலோ ரூ.105,000.00 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க கடன் வட்டி விகிதம் 0.25 அடிப்படை புள்ளிகள் குறைப்பு: பஞ்சாப் நேஷனல் வங்கி அதிரடி!

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!
Anbumani Ramadoss

திமுக ஆட்சியில் அதிகரிக்கும் சாத்தான்குளம் நிகழ்வுகள்.. மனசாட்சி இருந்தால்.. அன்புமணி காட்டம்!

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!
Hindu woman raped by local politician

வங்கதேசத்தில் வீடு புகுந்து இந்து பெண் பாலியல் வன்புணர்வு; உள்ளூர் அரசியல்வாதி வெறிச்செயல்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

ட்விட்டர் 

இன்ஸ்டாகிராம்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com