Om Movie Song Release: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தின் ‘வீழா வீரா’ பாடல் வெளியாகியுள்ளது.
Om Movie Song Release: தனுஷ் – மம்மூட்டி நடிக்கும் ‘ஓம்’ படத்தின் ‘வீழா வீரா’ பாடல் வெளியாகியுள்ளது.

Published on: October 21, 2026 at 1:46 pm
சென்னை, அக்.21, 2026: நடிகர் தனுஷ் மற்றும் மலையாள நடிகர் மம்மூட்டி இணைந்து நடிக்கும் ‘ஓம்’ திரைப்படத்தின் இரண்டாவது பாடலான ‘வீழா வீரா’ வெளியாகியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தின் பாடல், ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் இசையமைப்பாளர் சாய் அபியங்கர் இசையமைத்துள்ள இந்தப் பாடலுக்கு அருண் ஸ்ரீனிவாசன் வரிகள் எழுதியுள்ளார். பாடகர் திப்பு மற்றும் சாய் அபியங்கர் இணைந்து பாடியுள்ளனர். ஏற்கெனவே வெளியான ‘அலாக்கா லோவா’ பாடலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது இரண்டாவது பாடலும் வெளியாகியுள்ளது.
தனுஷின் 55-வது திரைப்படமாக உருவாகும் ‘ஓம்’ படத்தில் மம்மூட்டி, சாய் பல்லவி, ஸ்ரீலீலா, நசீருதீன் ஷா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செம்மரக் கடத்தலை மையமாகக் கொண்ட ஆக்ஷன் கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது. தனுஷ் மரம் வெட்டும் தொழிலாளியாக நடிப்பதாகப் படத்தின் முன்னோட்டம் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.
முதலில் அக்டோபர் 16-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த இப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு, தற்போது நவம்பர் 20, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தனுஷ் – மம்மூட்டி முதன்முறையாக இணைந்து நடிப்பதால் இப்படத்தின் மீது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பு வைத்துள்ளனர்.
இதையும் படிங்க : வாழ்க்கைத் துணையிடம் இருக்க வேண்டிய குணங்கள் என்ன? மனம் திறந்த ஐஸ்வர்யா ராய்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com