WhatsApp Caller Identification Feature: வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அழைப்பை ஏற்பதற்கு முன்பே யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறியலாம்!
WhatsApp Caller Identification Feature: வாட்ஸ்அப்பில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி, அழைப்பை ஏற்பதற்கு முன்பே யார், எதற்காக அழைக்கிறார்கள் என அறியலாம்!

Published on: October 21, 2026 at 1:36 pm
சென்னை, அக்.21. 2026: வாட்ஸ்அப் நிறுவனம், அறிமுகமில்லாத எண்களில் இருந்து வரும் அழைப்புகளைப் பயனர்கள் எளிதாக நிர்வகிக்கும் வகையில் புதிய வசதியை உருவாக்கி வருகிறது. ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக உருவாக்கப்படும் இந்த வசதி மூலம், அழைப்பை ஏற்பதற்கு முன்பே எதிர்முனையில் இருப்பவர் எதற்காக அழைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.
இந்த வசதி செயல்பாட்டுக்கு வந்தால், அறிமுகமில்லாத எண்ணிலிருந்து அழைப்பு வரும்போது, அழைப்பவரிடம் வாட்ஸ்அப் தானாகவே அழைப்பதற்கான காரணத்தைக் கேட்கும். அவர் அளிக்கும் பதிலை எழுத்து வடிவில் பயனர்கள் பார்க்க முடியும். இதன் அடிப்படையில் அழைப்பை ஏற்கலாமா அல்லது நிராகரிக்கலாமா என்பதை முடிவு செய்யலாம்.
தற்போது இந்த வசதி உருவாக்கும் நிலையில் மட்டுமே உள்ளது; பீட்டா சோதனைக்குக்கூட இன்னும் வெளியிடப்படவில்லை. அதிகாரப்பூர்வ வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படவில்லை. இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டால், தேவையற்ற அழைப்புகள் மற்றும் மோசடி அழைப்புகளைத் தவிர்க்கப் பயனர்களுக்கு உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : மைக்ரோசாப்ட் கோபைலட்-ஐ கைவிடுகிறதா? விண்டோஸ் 11 ஏ.ஐ அம்சங்களில் கவனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com