இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஜாமின் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
இன்ஸ்டாகிராமில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த இளைஞருக்கு ஜாமின் அளிக்க டெல்லி உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
Published on: December 4, 2024 at 11:01 pm
New Delhi | டெல்லி காவல் நிலையத்தில் சிறுமி ஒருவர், இளைஞர் மீது பாலியல் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் “சம்பந்தப்பட்ட இளைஞர், இன்ஸ்டாகிராம் மூலமாக தொடர்பு கொள்கிறார். வீடியோ காலிங் செய்து பாலியல் தொல்லை அளிக்கிறார். மேலும் எனது வீடியோ மற்றும் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு விடுவேன் எனவும் மிரட்டுகிறார்.
அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; மேலும் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்” என தெரிவித்து இருந்தார். இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி, சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பாலியல் தொல்லை அளித்த சைபுல் கான் என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தமக்கு முன் ஜாமின் அளிக்க வேண்டும் என சைபுல் கான் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவில் சைபுல் கானுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் காசிப் அக்தர் மற்றும் பராஸ் மிர்ஷா ஆகியோர் ஆஜரானார்கள். அரசு தரப்பில் கூடுதல் பப்ளிக் ப்ராஸிக்யூட்டர் ராஜ்குமார் ஆஜர் ஆனார். இந்த வழக்கில் சிறுமிக்கு instagram மூலம் தொடர்பு கொண்டு பாலியல் தொல்லை அடித்த சைபுல் கானுக்கு ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அமித் மகாஜன், குற்றம் சாட்டப்பட்ட சைபுல் கானுக்கு ஜாமின் வழங்க மறுத்துவிட்டார்.
இதையும் படிங்க : உத்தர பிரதேசத்தில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் ; ஒரு வாரத்திற்கு பின் வெளியான உண்மை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com