Health | தினமும் உணவில் ஓர் முந்திரி பருப்பு சேர்ப்பதால் உடலில் பல ஆரோக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன.
Health | தினமும் உணவில் ஓர் முந்திரி பருப்பு சேர்ப்பதால் உடலில் பல ஆரோக்கியமான நன்மைகள் ஏற்படுகின்றன.
Published on: December 5, 2024 at 9:22 am
Health | நல்ல ஆரோக்கியமான உடலினை பெறுவதற்கு சத்தான உணவு வகைகளை தினந்தோறும் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். அந்த வகையில் முந்திரி பருப்பு அதிக சத்துக்களை கொண்ட ஒரு ஆரோக்கியமான உணவு வகையாகும். தினமும் உணவில் ஓர் முந்திரி சேர்ப்பதால் பல நன்மைகள் ஏற்படுகின்றன. முந்திரியில் வைட்டமின் கே, ஈ மற்றும் பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்களான தியாமின், வைட்டமின் பி6, மெக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் துத்தநாகம் உள்ளிட்ட அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை.
தினமும் முந்திரி சாப்பிடுவதால் கிடைக்கும் 5 நன்மைகள்
இதய ஆரோக்கியம்
முந்திரியில் இதய ஆரோக்கியத்திற்கு தேவையான மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்புகள் நிறைந்துள்ளன. இது ட்ரைகிளிசரைடுகள் மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இதயம் நல்ல விதமாக செயல்படவும் உதவுகிறது.
இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்துகிறது
முந்திரிப் பருப்பில் குறைந்த கிளைசெமிக் குறியீடு மற்றும் அதிக நார்ச்சத்து உள்ளது. இவை இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது.
எடை மேலாண்மை
முந்திரிப் பருப்பில் அதிக அளவு கலோரிகள் உள்ளது. இது எடை மேலாண்மைக்கு உதவுகிறது. முந்திரியில் உள்ள உயர் நார்ச்சத்து மற்றும் புரத அளவுகள் முழுமையின் உணர்வை ஏற்படுத்துகிறது. எனவே தேவையில்லாத உணவுகளை உண்ணாமல் தவிர்க்க முடிகிறது.
எலும்பு ஆரோக்கியம்
முந்திரி பருப்பில் மெக்னீசியம், கால்சியம் மற்றும் வைட்டமின் கே நிறைந்துள்ளது. இவை அனைத்தும் வலுவான மற்றும் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க முக்கிய பங்கு வைக்கிறது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் அபாயத்தைக் குறைக்க உதவும்.
மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது
முந்திரியில் உள்ள வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி ஆற்றல் உற்பத்தியை ஊட்டுவிக்கிறது. மேலும் மனநிலையை ஒழுங்குபடுத்தவும், நினைவாற்றலைத் தக்க வைக்கவும் உதவுகின்றது.
இதையும் படிங்க : உடல் எடை, மன அழுத்தம் குறையும்; தினந்தோறும் குட்டி நடை: இத்தனை பலன்களா!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com