How to make vazhaipoo poriyal | சுவையான வாழைப்பூ பொரியல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
How to make vazhaipoo poriyal | சுவையான வாழைப்பூ பொரியல் எப்படி செய்ய வேண்டும் என்று தெரியுமா?
Published on: November 21, 2024 at 10:50 am
How to make vazhaipoo poriyal | வாழைப்பூவை பயன்படுத்தி செய்யக்கூடிய ஒரு சூப்பரான ரெசிபி வாழைப்பூ பொரியல். சுவையான வாழைப்பூ பொரியல் எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுந்து -1 டீஸ்பூன்
கடலை பருப்பு – 1 டீஸ்பூன்
வாழைப்பூ-1
பெரிய வெங்காயம்-1
வத்தல் -4( காரத்துக்கு ஏற்ப சேர்க்கவும் )
மஞ்சள் தூள் -1/4 டீஸ்பூன்
அரைக்க வேண்டியவை
தேங்காய் – 4 துண்டு
சோம்பு -1 டீஸ்பூன்
செய்முறை
வாழைப்பூவை சுத்தம் செய்து பூவின் மத்தியில் உள்ள தண்டு பகுதியை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு மற்றும் தயிர் கலந்த நீரில் சேர்த்துக் கொள்ளவும். வெறும் தண்ணீரில் சேர்த்தால் வாழைப்பூ கருத்துவிடும். பின்னர் ஒரு மிக்ஸி ஜாரில் தேங்காய் மற்றும் சோம்பு சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் அதனுடன் கடுகு சேர்க்க வேண்டும்.
கடுகு பொரிந்ததும் அதனுடன் உளுந்து, வத்தல் மற்றும் கடலை பருப்பு சேர்த்து வறுக்க வேண்டும். இவை பொன்னிறமாக மாறியதும் ஒரு பெரிய வெங்காயத்தை சிறிதாக நறுக்கி சேர்க்க வேண்டும். வெங்காயம் வதங்கியதும் இதனுடன் பொடியாக நறுக்கிய வாழைப்பூ சேர்த்து வதக்க வேண்டும். இதனுடன் சிறிது மஞ்சள் தூள் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்க வேண்டும்.
அடுப்புத்தீயை சிம்மில் வைத்து 10 நிமிடம் மூடி போட்டு வேக விட வேண்டும். இடை இடையே அடி பிடிக்காதவாறு கிளறி விட வேண்டும். இவை வெந்ததும் இதனுடன் அரைத்து வைத்த தேங்காய் சோம்பு கலவையை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும். இவை நன்கு வெந்தவுடன் இதனுடன் சிறு பருப்பு அல்லது முருங்கை இலையினை சேர்த்து வதக்கி தயார் செய்யலாம்.
வரமிளகாய் சேர்க்காதவர்கள் தேங்காய் சேர்க்கும் பொழுது சிறிது வத்தல் தூள் சேர்த்துக் கொள்ளலாம். வாழைப்பூ நன்கு வெந்து தயார் நிலையில் வந்ததும் அடுப்பில் இருந்து இறக்கவும். இப்போது சுவையான வாழைப்பூ பொரியல் தயார்.
இதையும் படிங்க : 100 கிராம் பன்னீர் போதும்.. ஹோட்டல் சுவையில் வெஜ் இறால் தொக்கு ரெடி!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com