வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் இந்திய- சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
வியட்நாமில் நடைபெறும் மாநாட்டில் இந்திய- சீனா பாதுகாப்பு அமைச்சர்கள் இடையேயான பேச்சு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
Published on: November 20, 2024 at 9:12 pm
Updated on: November 20, 2024 at 9:42 pm
Rajnath Singh Laos Visit | மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லாவோஸ் நாட்டிற்கு 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
அங்கு நடைபெறும் ஆசியான் (ASEAN) பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டத்தில் ராஜ்நாத் சிங் கலந்து கொள்கிறார். இக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வியன்ட்டியன் நகருக்கு சீனாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் டாங் ஜுன் சென்றுள்ளார்.
இதையடுத்து சீன பாதுகாப்புத்துறை அமைச்சர், மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
கிழக்கு லடாக்கில் ரோந்து செல்வது தொடர்பான விவகாரத்தில் உடன்பாடு ஏற்பட்டு, சமீபத்தில் இந்தியா-சீனா படைகள் டெப்சாங், டெம்சோக் பகுதிகளில் இருந்து வாபஸ் பெறப்பட்ட நிலையில், தற்போது இருநாட்டு பாதுகாப்பு அமைச்சர்கள் இடையே நடந்த இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க வா நண்பனே.. நண்பனே.. இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com