இஸ்ரோ தயாரித்த GSAT-N2 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
இஸ்ரோ தயாரித்த GSAT-N2 செயற்கைக்கோளை, அமெரிக்காவின் ப்ளோரிடாவில் இருந்து எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் வெற்றிகரமாக விண்ணில் ஏவியது.
Published on: November 19, 2024 at 1:52 pm
SpaceX launched ISRO’s GSAT-N2 | இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (ISRO) தனது புதிய 4.7 டன் எடை கொண்ட ஜிசாட் -என் 2 (GSAT-N2) செயற்கைக்கோளை நேற்று (செவ்வாய்க்கிழமை) எலான் மஸ்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் மூலம் விண்வெளிக்கு செலுத்தியது. இது இந்தியாவின் விண்வெளி நிறுவனத்திற்கான ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் முதல் வெளியீடு ஆகும்.
இந்த செயற்கைக்கோள், 4,700 கிலோகிராம் எடையுடன், இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திறனை விட மிகப்பெரியதாக இருந்ததும், ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சியின் ஏரியன் உடனடி ஏவுதல் தளம் ஏதும் இல்லை என்பதாலும் இஸ்ரோ ஸ்பேஸ்எக்ஸ் உதவியை நாடியது. இதற்கு ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஒத்துகொண்டது.
இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை 12.39 மணிக்கு, ஸ்பேஸ்எக்ஸ் தன் எக்ஸ் பதிவில் GSAT-N2 செயற்கைக்கோளை பால்கன் 9 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்வெளிக்கு செலுத்தி கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியது.
இதன் மூலம், இந்திய விண்வெளி ஆராய்ச்சி துறையில் புது பரிமாணம் ஏற்பட்டுள்ளது. மேலும் உலக அளவில் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் சாதனைகளை மேலும் வலுப்படுத்துகிறது.
இதையும் படிங்க மணிப்பூர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவிக்கு டி.கிருஷ்ணகுமார் பெயர் பரிந்துரை
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com