Health | அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுபட, 5 எளிய வழிகள் இங்கு உள்ளன.
Health | அசிடிட்டி தொல்லையில் இருந்து விடுபட, 5 எளிய வழிகள் இங்கு உள்ளன.
Published on: November 16, 2024 at 10:13 am
Health | தீபாவளி போன்ற பண்டிகை காலங்களிலும் திருமணம் போன்ற விசேஷ காலங்களிலும் மக்கள் அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பதில்லை. இது உடலில் செரிமான பிரச்சினையை ஏற்படுத்துகிறது. மேலும் வயிற்று வலி, அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் ஆகியவற்றை அதிகரிக்கின்றன. உணவில் கட்டுப்பாடு இன்றி வறுத்த மற்றும் இனிப்பு உணவுகளை மீண்டும் மீண்டும் சாப்பிடுவது வயிற்றில் அமிலத்தை உற்பத்தி செய்யத் தொடங்குகிறது. இது அசிடிட்டி பிரச்சனையை அதிகரிக்கிறது. ஏற்கனவே இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் மீண்டும் அசிடிட்டியை சந்திக்க வேண்டி வரும். பண்டிகைக் காலத்திற்குப் பிறகு ஏற்படும் இது போன்ற பிரச்சினைகளை தவிர்க்க சில வழிமுறைகளை பின்பற்றலாம்.
அசிடிட்டி ஏற்பட காரணம்?
தேசிய சுகாதார நிறுவனத்தின் கூற்றுப்படி, வயிற்றில் இருக்கும் அமிலம் அதிக அமிலத்தன்மை கொண்டது. இது உணவை ஜீரணிக்கவும் உணவில் உள்ள சத்துக்களை உதவுகிறது. அதன் உதவியுடன் உடல் ஊட்டச்சத்துக்களை பெறுவதோடு நொதிகளையும் உற்பத்தி செய்யத் தொடங்குகின்றன. ஆனால் வயிற்றில் அமிலத்தின் அளவு அதிகரிப்பதால், அமில ரிஃப்ளக்ஸ் மற்றும் அல்சர் அபாயம் அதிகரிக்கிறது.
அசிடிட்டியைக் கட்டுப்படுத்தி செரிமானத்தை மேம்படுத்த இந்த 5 வழிமுறைகளை பின்பற்றவும்:
சிறிய அளவில் உணவு உண்ணுதல்
ஒரே நேரத்தில் அதிகப்படியான உணவு உட்கொள்வதையும் உணவை வேகமாக உட்கொள்வதையும் தவிர்க்க வேண்டும். உணவினை சிறிய அளவிலும் மெதுவாகவும் சாப்பிட வேண்டும். மேலும் 3 முதல் 4 மணிநேர இடைவெளியில் உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். உணவு உண்ட உடனே தூங்குவதும் அசிடிட்டியை அதிகரிக்கிறது எனவே இரவு தாமதமாக சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும்.
ஆரோக்கியமான உணவினை தேர்ந்தெடுத்தல்
உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளைச் சேர்ப்பதன் மூலம் செரிமான பிரச்சனையிலிருந்து உடலைப் பாதுகாக்க முடிகிறது. இது தவிர, எண்ணெய் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவின் அளவைக் குறைத்து, முழு தானியங்கள், பருப்பு வகைகள், விதைகள் மற்றும் பருப்பு வகைகள் போன்ற ஆரோக்கியமான உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும். நார்ச்சத்து நிறைந்த உணவை உட்கொள்வது மலச்சிக்கல் மற்றும் அசிடிட்டி பிரச்சனையையும் தீர்க்கிறது.
நீரிழப்பிலிருந்து உடலைப் பாதுகாத்தல்
கார்பனேற்றப்பட்ட பானங்கள் மற்றும் காஃபினுக்குப் பதிலாக அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் வயிற்றில் அமிலம் உருவாவதை தடுக்கலாம். இது வயிற்று எரிச்சல், வலி போன்ற குடல் நோயின் அபாயத்தை குறைக்கிறது. இது தவிர, அல்கலைன் தண்ணீரை உட்கொள்வது செரிமானத்தை அதிகரிக்கிறது மற்றும் உடலில் உள்ள நச்சுகளை வெளியிடுகிறது.
உணவை மென்று சாப்பிடுத்தல்
உணவை வேகமாக சாப்பிடுவதால் வயிற்றில் வாயு சேரத் தொடங்குகிறது. இது அசிடிட்டியை ஏற்படுத்துகிறது. எனவே உணவை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இது நல்ல செரிமானத்திற்கு வழிவகுக்கும்.
உடற்பயிற்சி செய்தல்
ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்வதால் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. காலை எழுந்தவுடன் சிறிது நேரம் தியானம் மற்றும் கார்டியோ பயிற்சி செய்யவும். இதனால் உடலில் இரத்த ஓட்டம் சீராகி உடல் சுறுசுறுப்பாக இருக்கும். வழக்கமான உடற்பயிற்சி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
இதையும் படிங்க : வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாறு; இத்தனை மருத்துவ பலன்களா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com