நடிகர் சூர்யாவின் கங்குவா படம், வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
நடிகர் சூர்யாவின் கங்குவா படம், வசூல் ரீதியாக பின்னடைவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது.
Published on: November 16, 2024 at 8:16 am
Kanguva Box Office Collection | நடிகர் சூர்யா, பாபி தியோல், நடிகை திஷா பதானி என பெரும் நட்சத்திர பட்டாளம் நடித்துள்ள படம் கங்குவா. நவம்பர் 14ஆம் தேதி திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆனது.இந்த நிலையில் முதல் நாள் வசூல் குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி கங்குவா விமர்சன ரீதியாகவும்; வசூல் ரீதியாகவும் பின்தங்கி இருப்பது தெரியவந்துள்ளது.
அதாவது இந்த ஆண்டில் வெளியான கமல்ஹாசனின் இந்தியன் 2, ரஜினிகாந்தின் வேட்டையன், விஜயின் கோட் ஆகிய படங்களில் முதல் நாள் வசூலை கங்குவா முறியடிக்க வில்லை. மாறாக பின்னடைவை சந்தித்து வருகிறது. மேலும் படத்தில் வரும் வசனங்களும் இரைச்சலுடன் இருப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர். இந்த நிலையில் தியேட்டர் அதிபர்களிடம் சவுண்டை இரண்டு பாயிண்ட் குறைத்து வைக்கும் படி படக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்தப் படம் தமிழில் முதல் நாள் வசூலாக ரூபாய் 13 கோடியும், தெலுங்கு மற்றும் இந்தியில் முறையே ரூ.5 மற்றும் ₹.3.25 கோடியும் வசூலித்துள்ளது. கன்னடம் மற்றும் மலையாளத்தில் ரூபாய் 10 லட்சம் வரை வசூலித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நடிகர் சூர்யாவின் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ளது. இந்த படத்தின் பட்ஜெட் கிட்டத்தட்ட ரூ.350 கோடி எனவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க சூர்யா தவறவிட்ட 5 படங்கள்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com